தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (SDPT) யின் மே தின அறைகூவல் 2016 மே 1 – தொழிலாளர் தினம்

 

மேதினம் ஒடுக்கப்பட்ட மக்களின் தினம். சமூக பொருளாதார ரீதியில் இம் மக்களின் வாழ்க்கைநிலை பொதுவாக இலங்கையிலும், குறிப்பாக வடக்கு-கிழக்கிலும்; எவ்வாறிருக்கிறது? வடக்கு- கிழக்கைப் பொறுத்தவரை பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவத்தை, ஆட்சிப் பொறுப்பை கைகளில் வைத்திருக்கும் தமிழ் அரசியல் தலைமை சாதாரண மக்களின் அபிலாசைகள் தொடர்பாக என்ன செய்கிறார்கள், செய்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குரியது. இதற்கான பதில்; வெறுமை, விரக்தி, அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. இவர்கள் மக்களுக்கு உருப்படியாக எதைச் செய்தார்கள் என்பதை பட்டியலிட முடியவில்லை.


எமது கைகளில் அதிகாரம் இல்லை என்கிறார்கள். அவ்வாறானால் மக்களின் பிரதிநிதிகள் என்ற பதவிகளை இவர்கள் அலங்கரிப்பதில் அர்த்தம் ஏதும் இருக்கிறதா? மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற பொறுப்புணர்வை எவ்வளவு தூரம் பிரதிபலிக்கிறார்கள் .
ஆனால், தமிழர்களின் உரிமை, அபிலாசை என்றெல்லாம் வாய்பந்தல் போடுகிறர்hகள். மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகளை ஆற்றாமல் கபடத்தனமாக இலட்சியவாதம் பேசுவது“ கூரைஏறிக் கோழிபிடிக்கமுடியாதவன் வானம் ஏறிவைகுண்டம் ஏகிய”கதையைத்தான் ஞாபகப்படுத்திகிறது.
எமது கிராம, நகரங்களில் வறுமை கோரத்தாண்டவம் ஆடுகின்றது. வுpலைவாசி வானத்தில் ராக்கெட்டாகப் பறந்துகொண்டிருக்கிறது. சாதாரண மக்கள் வறுமையுடன் அல்லாடுகிறார்கள். மக்களின் வாழக்கைச் சுமையைக் குறைக்க வாழ்வை இலகுவாக்க இவர்கள்; என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
• இளந் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு, தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு, வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு,
• சுகாதார வசதிகளை விருத்தி செய்வதற்கு, நகரங்களிலும், கிராமங்களிலும் பெரும் குப்பை மேடுகளை- கழிவுகளை அகற்றுவதற்கு,
• தாழ்ந்து போகும் கல்வியை மேம்படுத்துவதற்கு,
• உள்ளுரில் கரடு முரடான தெருக்களை செப்பனிடுவதற்கு,
• பரவலாக காணப்படும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு,
• உள்ளுர் வெளியூர் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்துவதற்கு,
• தனியார் வைத்தியசாலைகள் மற்றும் தனியார் போக்குவரத்தில் இருக்கும் அசௌகரியங்கள் நீதிநியாயமற்ற பணவசூலை சூறையாடலை கட்டுப்படுத்துவதற்கு
• விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு,
அ. உற்பத்திச் செலவை குறைப்பதற்கு,
ஆ. சந்தைப்படுத்தல் வசதிகளை இலகு படுத்துவதற்கு,
இ. விவசாயத் தொழிலின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு,
ஈ. வரட்சியான காலநிலைகளை எதிர்கொள்வதற்கு,
உ. மண்வளம் பழுதடைந்து போவதிலிருந்து பாதுகாப்பதற்கு,
ஊ. விவசாய நிலங்கள் கொங்கிறீற் காடுகளாக மாறுவது குறித்து,
இவர்களுக்குப் பிரக்ஞை ஏதுமிருக்கிறதா?
• தொடர்கதையாகும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு,
அ. மீன் கடல் வளங்களை விருத்தி செய்வதற்கு,
ஆ. ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதற்கு,
இ. மீனவர்களுக்கான வீடு, சுகாதாரம், காப்புறுதி, மற்றும் சமூகப் பாதுகாப்புக்கள் தொடர்பாக என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது,
• தொழில் துறைகளை உருவாக்குவதற்கு,
அ. தொழில் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் உண்டா?
ஆ. எமது வாழிடச் சூழலுடன் இசைந்ததாக தொழில் துறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவா?
• அன்றாட வாழ்க்கை பாதுகாப்பற்றதாக ஆகிக்கொண்டிருக்கிறது.
அ. வீதியில் சாதாரணமனிதன் நடந்து செல்வதே ஆபத்தானதாக மாறியிருக்கிறது.
ஆ. வன்முறைகள் பெருகியுள்ளன பெண்களுக்கெதிரான வன்முறைகள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
இ. பொதுவெளி இங்கு பாதுகாப்பற்றதானதாக மாற்றப்பட்டிருக்கிறது. வன்முறை கோரததாண்டவம் ஆடுகின்றது.
தமது அரசியல் பிரதிநிதித்துவ அதிகாரத்தின் ஊடாக சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக இயந்திரத்தை நேர் சீர் படுத்தமுடியாதா? அறிவுறுத்த வேண்டாமா?
குறைந்தபட்சம் முயற்சிக்க வேண்டாமா?
“கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாத” தலைமை சாதாரண மக்கள் தொடர்பில் எவ்வளவு தூரம் அர்த்தபூர்வமானது.
• யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் கடந்தும் அகதி முகாம்களில் வாழும் மக்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டாமா?
• மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படவிருக்கும்? 65 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கும், அந்தவீடுகளின் இசைவான தன்மைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டாமா? தீவிர ஈடுபாட காட்ட வேண்டாமா?
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் தலைமைத்துவத்தின் கடமை மக்களுக்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதே!
என்னவோ தெரிவுசெய்யப்பட்ட பின் இவர்கள் மேட்டுக்குடி கனவான்கள் போல் நடந்துகொள்கிறார்கள்.
அவர்களுக்கும் மக்களுக்கும் சம்பந்தம் இருகிறதா?
ஆடம்பார வாகனங்கள், பரிவாரங்கள், மாலைமரியாதை, பொன்னாடை, வாத்தியம் மேளதாளம் என்று ஆரோகணிக்கிறார்கள்.
இடைக்கிடை தமிழர் உரிமைக்காக உயிர் நீத்தவர்களைபற்றியும் உணர்;ச்சி பொங்;கப் பேசுகிறார்கள்.
யுத்தத்தில் அழிவடைந்தசமூகம் தனது சொந்த நிலத்தில் நம்பிக்கையுடன் எழுந்து நிற்பத்ற்கு வழி செய்யவேண்;டியவர்கள் அலட்சிய மனோபாவத்துடன் இருக்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.
பல்லாயிரக்காணக்கான பெண்கசள் தலைமைதாங்கும் குடும்பங்கள்,
சிறைகளில் வாடுபவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பாக வேதனையுடன் வாழும் மக்களுக்கு நல்லசெய்தி ஏதும் இவர்களிடமிருந்து கிட்டவில்லை.
இழிவான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மூச்சாக நடைபெறவில்லை.
போராடி அழிந்த சமூகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எழிமையாக வாழத் தெரிந்திருக்க வேண்டும். பிரத்தியேகமான சௌகரியமான வாழ்க்கை ஒன்றை இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அமைத்திருக்கிற இவர்களுக்கு மக்களின்; துன்பங்கள் புரிவதில்லை. அல்லது அதீத அலட்சியம் காட்டுகிறார்கள்.
சாதாரண பொதுமக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் அவலங்களை இவர்கள் உணர்வதில்லை.
இது எமது சமூக அரசியல் முறைமையின் தன்மையாக இருக்கிறது. இந்த அமைப்புமுறை தகரவேண்டும்.
நாடளாவிய அளவிலும் நிலமைகள் சிறப்பாக இருக்கிறதென்று கூறிவிட முடியாது.
2015 ஜனவரி 8 இல் ஏற்பட்ட நாடளாவிய அதிகாரமாற்றம்
ஜனநாயக-சுதந்திரத்தை ஓரளவு ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், சாதாரண மக்களின் வாழ்வு மேம்பட்டதாய் கூறிவிட முடியாது.
வருடாவருடம் மேதினம் நினைவு கூரப்பட்டாலும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வின் மேம்பாடு என்பது நத்தை வேகத்திலேயே நகர்கிறது.
இலங்கையின் தேசிய வருமானத்தில் பெரும்பகுதியை இன்றளவில் ஈட்டித்தரும் மலையகத் தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைநிலை கடைக் கோடியிலேயே அமைந்திருக்கிறது.
மத்தியகிழக்கிற்கு வேலைக்கு சென்ற இலங்கையின் இலட்சக்கணக்கான பெண்களின் வாழ்க்கைநிலை-அவர்களின் குடும்பங்களின் சமூகப் பாதுகாப்பு அன்றாடம் அச்சமூட்டுவதாயுள்ளது.
ஆடைத் தொழிற்சாலை உட்பட தொழில் துறைகளில் இருக்கும் தொழிலாளர்களின் சமூகப்பாதுகாப்பு இன்றளவில் உறுதிப்படுத்தப்படவில்லை.
அவ்வப்போதான தேர்தல் வாக்குறுதிகளில் நிவாரணம் தருவதாக சம்பள உயர்வு வழங்குவதாகப் பேசுவது பின்னர் இந்த வாக்குறுதிகள் எல்லாம் அர்த்தமிழந்து நீர்த்துப் போவதும் எமது அனுபவங்களாகும்.
நிரந்தரமான சமூகப் பாதுகாப்பு ஏற்பாடு எதுவும் கிடையாது.
இலங்கையில் வாழ்க்கை செல்வந்தவர்களுக்கும் என்றாக்கப்பட்டிருக்கிறது.
“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது உலக அளவிலும் இலங்கை அளவிலும் இன்றளவில் நிஜமானது.
பெருமளவிலான மக்கள் அவநம்பிக்கையானதும் எரிச்சலூட்டுவதுமான வாழ்க்கை முறையை அனுபவிக்கிறார்கள். இதில் இன, மத பேதம் எதுவும் கிடையாது.
ஆனால், இன, மத ரீதியான முரண்பாடுகள் இன, மத சமத்துவத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும். எண்ணிக்கையில் பெரும்பான்மை என்ற வாதத்தால் தீர்க்க முடியாது.
எண்ணிக்கையில் சிறியதோ பெரியதோ இலங்கையின் தேசிய சமூகங்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும்.
இந்த நாடு பிரகாசமான பாதையில் செல்வதற்கு இந்தச் சமத்துவம் மிகமிக முக்கியமனது.
இந்தநாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு, இனங்களின் சமத்துவம் தொடர்பில் கிளர்ச்சிகளும் யுத்தமும் கடந்த 40 ஆண்டுகளாக நடந்துள்ளன. பல்லாயிரம் இளைஞர் யுவதிகளின் குருதி சிந்தப்பட்டிருக்கிறது.
இந்தப் பேரழிவுகளுக்குப் பின்னும் சமூக சமத்துவம் பற்றிய சமூக ஜனநாயகம் பற்றிய எண்ணக் கருத்துக்கள் வளர்ச்சி அடையாதது துரதிஸ்டமானதே
எந்த இன சமூகமானாலும் இன்னொருசமூகத்தின் மேல் மேலாண்மை செலுத்துவதால் அது சுதந்திரமாக வாழ முடியாது.
“வாழு வாழவிடு” என்பதே இங்கு உயர் விழுமியமாக இருக்க முடியும்.
திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலமோ இதர வன்முறைகள் மூலமோ இராணுவ மயமாக்கல் மூலமோ இலங்கையில் சமூகங்களை ஒருதேசமாக ஒன்றிணைக்க முடியாது. மாற்றம் மனங்களில் நிகழவேண்டும்.
மனங்களில் அது நிகழ வேண்டுமானால் வெவ்வேறு சமூகங்களின் சமூக பொருளாதார கலாசார வளர்ச்சி தங்குதடையின்றி நிகழ்வதற்கான இடைவெளி வேண்டும்.
ஆளும் வர்க்கத்திற்கு சாதாரண பெருவாரியான மனிதர்களின் வாழ்வியல் கோலங்கள் பற்றிய அலட்சியம் காணப்படுகிறது. அது எப்போதும் அதிகார மமதையுடன் தான் பிரச்சினைகளை அணுகும்.
இலங்கையின் அரசமற்றும் அதிகாரக் கட்டமைப்பு இன்றுவரை இறுகிப்போயிருக்கிறது.
எனவே, ஜனநாயக மறுசீரமைப்பு என்பது இடையறாத போராட்;டமாக நிகழ வேண்டும். அதற்கு மக்களின் வெகுஜனங்களின் இடையறாத நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
சாதாரண மனிதர்களை கண்ணியப்படுத்துவதாக அவர்களது முக அடையாளத்தை ஏற்றுக்கொள்வதாக அரச முறை மாறும் வரை இந்த இயக்கம் ஒயாது நிகழ வேண்டும்.
அரசு-ம் மக்களின் பிரதிநிதிகள் என்போரும் இதைவிட வேறு விடயங்களுக்கு முன்னுரிமையளிக்க முடியாது.
தேர்தல் காலங்களில் பொதுவாக மக்கள் எனப் பேசுவது மற்றப்படி அந்த மக்களுக்கு எந்த இவர்களிடம் எந்த முக்கியத்துவமும் இல்லை.
தனி மனிதர்களாக எந்த முக்கியத்துவமும் சாதாரண மக்களுக்குக் கிடையாது.
ஒரு கெடுபிடியான சூழலில் மக்கள் வாழ்கிறார்கள்.
சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள், வறியவர்கள் நாளாந்தம் அவலங்களை சுமக்கிறார்கள். ஆனால், ஊடகங்களும் அதிகாரவர்க்கமும் எதுவுமே நடக்காததுபோல் எல்லாம் சரியாக இருப்பதுபோல் பாசாங்கு செய்கிறார்கள். அல்லது இங்கிதமாகப் பேச முனைகிறார்கள் மக்களின் சகிப்புத்தன்மையையிட்டு இவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள். சாதுமிரண்டால் காடுகொள்ளாது என்பது உலகப் பொதுவிதி
மக்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தாம் மேலெழுவதற்குத் தடைகள் எழுவதை ஒரு கட்டத்திற்கு மேல் சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே கீழிருந்துமேல் சமூக பொருளாதார வாழ்வு ஜனநாயகமயப்படுத்தப்பட வேண்டும். சமூக அநீதிகள் களையப்பட்டு சமநீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சமத்துவம் இல்லாத வாழ்க்கை எப்போதும் வெகுஜன நடவடிக்கைகளுக்கான அறைகூவலை விடுத்துக்கொண்டேயிருக்கும்.
இலங்கையில் இருக்கும் சமூகங்களுக்கும் அக புற நிலைகளில் சமூகநீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழர் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமல்ல சக சமூகங்களின் உரிமைகள் பற்றியும் நாட்டின் சமூகபொருளாதார வாழ்வு பற்றியும் அக்கறை செலுத்த வேண்டும்.
“எல்லோரும் இன்புற்றிருக்கவே இவ்வுலகு”.
அந்த எழிலார்ந்த உலகுபற்றிய கனவு பொங்கிப் பிரவகிக்க வேண்டும்.
நாம் நாகரீகமான மனிதர்கள் என உலகிற்குப் பறைசாற்றுவதாக இருந்தால் தமிழர்களுக்குள் நிலவும் கசடுகள் களையப்படவேண்டும்.
புதிய மனித முகம் கொண்ட மாற்றுப்பாதை பற்றி சிந்திக்க வேண்டும்.
மானிட நேயங்கொண்ட சமூகநீதியில் அக்கறைகொண்ட சக்திகள் ஒருங்கிணைந்து காத்திரமாகச் செயற்படுவது இன்றைய வரலாற்று அவசியமாகும்.
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (S.D.P.T)