புலிகளின் தகவல்களை ரோவிற்கு வழங்கிய புளொட் தலைவர் சித்தார்த்தன்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலைசெய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவை இடைமறித்துக்கேட்ட புளொட் அமைப்பின் உறுப்பினர் ஓருவர் அதனை தனது தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் கவனத்திற்கு கொண்டுவந்தார்- அவர் அதனை உடனடியாக இந்தியாவின் புலனாய்வு பிரிவினரிற்கு தெரிவித்தார்.

எனினும் அவர்கள் அந்த தகவலிற்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கவில்லை – இவ்வாறு புதிய ஆங்கில நூலொன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் டெக்கான் குரோனிக்கல் வெளியிட்டுள்ள இந்த நூலின் சில பகுதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விடையங்கள் வருமாறு

முன்னாள் இந்தியபிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்படுவதற்கு சற்றுமுன்னர் அவரைபேட்டி கண்ட நீனா கோபால் எழுதியுள்ள புதியநூலிலேயே இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இந்தியாவின் நீலகிரியில் காணப்பட்ட தமிழ் கிளர்ச்சிக்காரர்களின் 30ற்கும் மேற்பட்ட முகாம்களிற்கும்-யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அமைப்பை சேர்ந்தவர்களிற்கும் இடையில் நாளாந்தம் பரிமாறப்படும் நூற்றுக்கணக்கான தகவல்கள் இடைமறித்துக்கேட்கப்படுவது வழமைஇஇந்த தகவல்கள் அனைத்தும் வேதாரணியத்திற்கும்இபருத்தித்துறைக்கும் இடையில் இடம்பெறும் ஆயுதகடத்தல்கள் குறித்தததாகவே காணப்படும்.

எனினும் இதுவரை இடைமறிக்கப்பட்ட தகவல்களில் இதுபோன்று அச்சமடையவைத்த தகவல் எதுவும் காணப்படவில்லைஇ
1990 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் விடுதலைப்புலிகள் வழமையாக பயன்படுத்தும் ஓரு அலைவரிசையிலேயே இந்த தகவல் இடைமறிக்கப்பட்டது.

இந்த தகவல் இடைமறிக்கப்பட்டதும் அது விடுதலைப்புலிகளிற்கு எதிரான ஆயுதகுழுக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தியதுஇ-பழம்தமிழும்-யாழ்ப்பாண ஆங்கிலமும் கலந்த மொழியில் பரிமாறப்பட்ட அந்த தகவலை இந்திய தமிழர்களால் புரிந்துகொள்வது கடினம்இஇதன் காரணமாக மேலும் குழப்பம் ஏற்பட்டது.

‘‘டம்ப்பண்ணிடுங்கோ’’ என்பதே அந்த வார்த்தை. கொலைசெய்துவிடுங்கள் என்பதே அந்த வார்த்தையின் அர்த்தம்.ஆனால் இம்முறை உத்தரவு இந்தியபிரதமரை கொலைசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்னொரு தேசத்தின் தலைவரை கொலைசெய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

புளொட் தலைவர் சித்தார்த்தன் இதனை முதலில் கேள்விப்பட்டவுடன் அவர் மிகுந்த அச்சத்திற்குள்ளானார்.அவர் இதனை உடனடியாக இந்திய அமைதிப்படையின் புலனாய்வு தலைவராக செயற்பட்டவரான கேர்ணல் ஹரிகரனிற்கு தெரிவித்தார்.தமிழரும்இஇலங்கை தமிழர்களின் மொழிப்பாவனையை நன்கு அறிந்தவருமான ஹரிகரனிற்கு இந்த விடயத்தில் நன்கு உதவிபுரிந்தவர்- யாழ்ப்பாண தமிழர் ஓருவரை மணந்த அவரது உறவினர்.

ஹரிகரனும்இவிடுதலைப்புலிகளின் மனோபாவத்தை நன்கு அறிந்த ஓரு சில இந்திய புலனாய்வாளர்களும் மாத்திரே பரிமாறப்பட்ட அந்த செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டனர்.எனினும் இந்த தகவல் போய்ச்சேரவேண்டிய இடத்திற்கு சென்றுசேரவில்லைஇ உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு உரிய விதத்தில் அந்த தகவல் காணப்படாததாலோ அல்லது தெளிவற்றதாக அது காணப்பட்டதாலோ இதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை, எப்படி பார்த்தாலும் இந்தியாவால் வளர்த்தெடுக்கப்பட்ட கிளர்ச்சிக்குழுவான விடுதலைப்புலிகளால் இந்தியாவின் முன்னாள் பிரதமரிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை – அதில் உள்ள ஆபத்தை புரிந்துகொள்ளும் விடயத்தில் இந்திய புலனாய்வு அமைப்புகள் திறமையாக செயற்படவில்லை.

ராஜீவ்காந்தி பிரதமராக காணப்பட்டவேளையே இலங்கை தமிழ்தீவிரவாத இயக்கங்களிடமிருந்து எழக்கூடிய ஆபத்து குறித்து ரோ ராஜீவ்காந்திக்கு எச்சரித்திருந்தது என்கிறார் 1988 முதல் 94 வரை ரோவின் தலைவராக செயற்பட்ட பி .ராமன் இந்த எச்சரிக்கை விசேட புலாய்விலிருந்து கிடைக்காததால் அதற்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் இந்தியாவில் இருந்த காலத்தில் அவரை கையாண்ட சந்திரனிற்கு தற்போது 85 வயதுஇ ஆனால் அவர் ராஜீவ்காந்தியை கொலைசெய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவை இடைமறித்ததை இன்றும் நினைவில் வைத்துள்ளார்.

எப்படி அனைவரும் இந்த தகவலை புரிந்துகொள்ள தவறினர் என்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார் எனது அமைப்பை சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களின் தகவல்பரிமாற்றங்களை இடைமறித்துக்கேட்கும் பணியில் ஈடுபட்டிந்தவர்களும் குறிப்பிட்ட செய்தியை புரிந்துகொள்ள தவறிவிட்டனர் என அவர் குறிப்பிட்டார்.

இந்திய புலனாய்வு அமைப்புகள் சமிக்ஞைகளை சரியாக புரிந்துகொண்டிருந்தால்இபிரபாகரனின் மனதில் என்ன எண்ணம் காணப்படுகின்றது என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருந்தால்இநாங்கள் ராஜீவ்காந்தியின் மரணத்தை தடுத்திருக்கலாம், இது எங்களது தவறேஇ இடைமறித்துக்கேட்கப்பட்ட அந்த செய்தியின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதில் நாங்கள் பாரிய தவறிழைத்துவிட்டோம் நாங்கள் பிரபாகரனை புரிந்துகொள்வதில் தோல்வியடைந்துவிட்டோம், அவர் எங்களிற்கு எதிராக இந்தவிதத்தில் மாறுவார் என நாங்கள் கருதவில்லைஇநாங்கள் இதனை எதிர்பார்த்திருக்கவேண்டும், நாங்கள் ராஜீவ்காந்திக்கு துரோகமிழைத்தோம், அவரை காப்பாற்ற தவறினோம் என அவர் தனது டில்லி அலுவலகத்திலிருந்து கண்களில் நீர்வடிய எனக்கு கருத்து தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

26வருடங்களிற்கு பின்னர் சித்தார்த்னும்( தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்) கேர்ணல் ஹரிகரனும் ராஜீவ்காந்தியை கொலைசெய்யுமாறு வழங்கப்பட்ட உத்தரவு இடைமறித்துக்கேட்கப்பட்ட சம்பவம் குறித்து முழுமையாக நினைவில் இல்லை என்கின்றனர்.

ஆனால் இந்த தகவலை தீவிரமாக ஆராய்ந்து அதனை உரிய விதத்தில்கையாண்டிருந்தால் தற்போது வரலாறு வேறு பாதையில் பயணம்செய்துகொண்டிருக்கும் என்பதை இருவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்துகேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த புளொட் உறுப்பினர் ஓருவரே ராஜீவ்காந்தியை கொலைசெய்யுமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதை சித்தாத்தனின் கவனத்திற்கு கொண்டுவந்தார். புளொட் தலைவர் அதனை ஹரிகரனின் கவனத்திற்கு கொண்டுவந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.