விசமப் பிரச்சாரங்களை தயவு செய்து நிறுத்துக

“ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9 : ”
என தலைப்பிட்டு இரா.துரைரத்தினம் எழுதிய பொறுப்பற்ற ஆய்வுக்க் கட்டுரையினை இணையதளங்கள் சில தாமே படிக்காது வெளியிட்டு இருந்தமை கண்டிக்கப்படத்தக்கது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மீது வேண்டுமென்ரே சேறு பூசும் செயல். திரு. இரா.துரைரத்தினம் அவர்கள் நன்கு தகவல்களை அறிந்த பின்பு அலசி ஆராய்ந்திருந்தால் அவரின் அறிவைப் பாராட்டியிருக்க முடியும். அவர் யாரிடம் பரிசு வாங்கினாரோ தெரியவில்லை.

முன்னர் இவர்களை பயத்தால் ஆட்டுவித்த சக்த்தியோ முள்ளிவாய்க்காலோடு சங்கமித்துப் போனது. இனி ஏன் இந்தப் பயம் ? யாரை சந்தோசப் படுத்த இந்தப் பொய்கள்? உங்கள் எழுத்துக்களில் ஆண்மையில்லை, கற்பும் இல்லை. வேசித் தனமே நிறைந்து விரிந்து கிடக்கிறது. உங்களால்தானே புலித்தலைவர் பல்லாயிரம் போராளிகளோடு சரண் அடைய முடியாது போய் பல்லாயிரம் மக்களோடு தானும் தன் வாரிசுக்களுடன் மடிய நேரிட்டது. அவரை கொஞ்சமாவது சிந்திக்க விட்டீர்களா? உசுப்பேத்தி ஏத்தி கதையையே முடித்து விட்டீகளே. உங்களைப் போன்றவர்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லை. தமிழ் மக்களுக்கு கடந்த ஆறு வருடங்களில் எதையுமே செய்யாது அவர்களை தவிக்க விட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏன் இப்படியொரு வக்காளத்து?

தகவலுக்காக கூறி வைக்க விரும்புகிறேன். திரு. வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் மாத்திரமே எதிர் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறது. சூழ்நிலை காரணமாக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் போட்டியைத் தவிர்த்துக் கொண்டுள்ளது. அப்படியிருக்க, அம்பாறையில் ” தமிழ் மக்களின் வாக்குகளைப்பிரிப்பதற்காக தமிழர் விடுதலைக்கூட்டணி, ….” என்று ஓர் இடத்திலும், திருகோணமலையில் “வேட்பாளர்களை நிறுத்தியிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆனந்தசங்கரி,…” என்று மற்றோர் இடத்திலும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தயவு செய்து பிழையான தகவல்களை வழங்கி மக்களை மடையர்களாக ஆக்காது எழுதாமலே இருப்பது மக்களுக்கு செய்யும் தொண்டு என்று கூறி வைக்க விரும்புகிறேன்.

ஆனந்த சங்கரி அவர்கள் அடிக்கடி கூறுவார் ” தமிழ் மக்கள் என்ன பாவம் செய்தோமோ ? பேனா பிடிக்கத் தெரிந்தவன் எல்லாம் பத்ரிகையாலனும் அரசியல் ஆய்வாளனும் ” என்று. எமது தலைவரின் கருத்துக்கு மேட்குறிப்பிட்ட பேர்வழி ஓர் எடுத்துக்காட்டு. இன்று மக்கள் எதிர் பார்ப்புடன் வேண்டி நிற்பது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய முள்ளிவாய்க்காலும் அதன் பின்னரான நிம்மதியான வாழ்வுமே.

இப்படிக்கு
தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளன்
ரூபன்
tulf2000@yahoo.co.uk