அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றம் தொடரட்டும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இரண்டு வார காலமாக, நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம், நேற்று முன்தினம் (27) முடிவடைந்தது. அதில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அக்கூட்டத்துக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ்ஸையும் சந்தித்து உரையாடினார்.