இரட்டை நிலைப்பாடு

(இலங்கநாதன் குகநாதன்)

கனடாவுடனான சிக்கலில் இந்தியாவினுடைய இறையாண்மை போய் விட்டது என வாய் கிழிய வட இந்திய ஊடகங்களும், இந்துத்துவவாதிகளும் கூச்சலீட்டுக் கொண்டிருப்பது தெரிந்ததே! உண்மையில் அச் சிக்கலில் கனடாவின் இறையாண்மைதான் பாதிக்கப்பட்டது, அதாவது கனடா மண்ணில் இந்திய உளவாளிகள் தமது எல்லை தாண்டிய அரச பயங்கரவாதத்தினை நடாத்திய செயல் அது.