இலங்கை, பாகிஸ்தானை ‘விழுங்கிய’ பெல்ட் அண்ட் ரோடு திட்டம்: கடன் வலையில் சிக்க வைத்த சீனா

இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பிற நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கும் சீனாவின் ராஜதந்திர நடவடிக்கை உலகம் முழுவதையும் தற்போது திரும்பி பார்க்க வைத்துள்ளது.