சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 3)

உக்ரேனுக்கு மேற்காக உக்ரேனின் தலைநகர் கீவ்(Kiev) இற்கு அண்மையாக ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடானா பெலாறஸ்(Belarus) இல் இருந்து உக்ரேனுக்குள் படைகள் புகுந்துவிட்டன.

உக்ரேனின் தெற்கு பகுதியில் கருங்கடலுக்கு அருகில் அமைந்த கிறீமியா(Crimea)வில் இருந்து உக்ரோனுக்குள் தனது படைகளை நகரச் செய்தும் விட்டது ரஷ்யா. 2014 இல் உக்ரேனினல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ரஷ்ய சார்பு அரசை அமெரிக்க நேட்டோ கூட்டாளிகள் சதிப்புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து உக்ரேனின் ஒரு பகுதியாக இருந்த ரஷ்ய மொழி பேசும் கிறீமியாவை ரஷ்யா தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது.

முழு உக்ரேனையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்தும் விட்டது.

நேட்டோ அமைப்பில் இணையாது சுதந்திரமான நாடாக செயற்படுங்கள் எமது எல்லை நாடாக நட்பு நாடாக என்பதை மீறி மேற்குலகின் வேலைத்திட்டங்களுக்கு அமைய படைக் குவிப்புகளை மேற்கொண்ட உக்ரேனுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் தனது நாட்டின் பாதுகாப்பு கருதி செயற்படத் தொடங்கிவிட்டது ரஷ்யா.

வழமை போல் உக்ரேனுக்கு எதிரான யுத்தம் ஆரம்பித்தவுடன் உக்ரேன் நாட்டிற்கு ஆதரவான குரல் என்றதற்குள் தம்மை சுருட்டிக் கொண்டன நேட்டோ அமெரிக்க நாடுகள்.

இந் நிலையில் ஏற்கனவே எழுதிய இரண்டு பாகங்களை தொடர்ந்து மூன்றாம் பாகத்திற்குள் நுளைகின்றேன்… (முதல் இரண்டு பாகங்களையும் படிக்காதவர்கள் அதனை வாசியுங்கள் அப்போதுதான் தொடர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்)

முதலில் பால்டிக் நாடுகள் எனப்படும் லிதுவேனியா, லட்வியா, எஸ்டோனியா ஆகிய மாநிலங்கள் முதல் சுதந்திர குரலை எழுப்பின. அதன் பிறகு ஜார்ஜியாவும் சுதந்திரம் கோரியது. தொடர்ந்து இவை தம்மை சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்திக் கொண்டன.

அதனைத் தொடர்ந்து பால்டிக் நாடுகளுக்கு விரைவில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று ரஷியாவை அமெரிக்கா வலியுறுத்தியது. இந்த சில மாநிலங்களு அதிகாரங்களை பரவலாக்க மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து தொடர்ந்தும் சோவியத் ஒன்றியமாக ஒற்றுமையாக செயற்பட எடுத்த முயற்சிகள் கை கூடவில்லை.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஏனைய ஆர்மீனியா, மால்டோவியா, பைலோருஷியா, உஸ்பெக்கிஸ்தான், உக்ரைன் ஆகிய 5 மாநிலங்களும் தம்மை சுதந்திர நாடுகளாக பிரகடனம் செய்துகொண்டன.

கூடவே சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலத் தலைவர்களின் மாநாடு, கஜகஸ்தான் மாநில தலைநகரான “அல்மா அடா”வில் நடைபெற்றது.

சோவியத்தில் இருந்து பிரிந்து உருவான மொத்தம் உள்ள 15 மாநிலங்களில் பால்டிக் பகுதியைச் சேர்ந்த லிதுவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ரஷ்யா, உக்ரைன், கஜகஸ்தான், அஜர்பைஜான், ஆர்மீனியா உள்பட 11 மாநிலங்களின் தலைவர்கள் இந்த மகா நாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த 11 மாநிலத் தலைவர்களும் கூடி, தங்கள் மாநிலங்கள் சுதந்திர நாடுகள் என்றும், சோவியத் யூனியன் மறைத்து விட்டது என்றும் பிரகடனப்படுத்தினர். “காமன்வெல்த்” என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொள்வது என்றும் தீர்மானித்தனர்.

இதனால் சோவியத் யூனியன் என்று மாபெரும் தலைவரால் உருவாகப்பட்ட சோசலிச ஒன்றியம் டிசம்பர் 8, 1991ல் கலைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சோவியத் யூனியனின் அதிபரான கோர்பசேவும் தனது பதவியை டிசம்பர் 25, 1991 ம் தேதி இரவு ராஜினாமா செய்தார்.

டெலிவிஷன் மூலம் கார்பசேவ் தனது ராஜினாமாவை அறிவித்தார். “நான் ராஜினாமா செய்வது என்ற தீர்மானத்துக்கு வந்தது தவிர்க்க முடியாதது” என்று கூறினார். புதிய கூட்டமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

கோப்பச் சேவ் இன் இந்த பொருளாதாரச் சீர்திருத்தம், பிரிந்து செல்வது வரையிலான அதிகாரப் பரவலாக்கம் தாராளவாதத்தினால் ஏற்பட்ட இந்த உடைவிற்கு எதிராக செயற்பட்ட எட்டு கம்யூனிஸ்ட் முன்னணி தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். தமது முயற்சி தோல்வி அடைந்ததால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இவ்வாறுதான் சோவியத்தின் உடைவு ஏற்பட்டது

இன்று யுத்தத்தின் மையப் புள்ளியாக இருக்கும் உக்ரேன் 1991 இன்று வலிந்து உடைக்கப்பட்ட சோவியத் யூனியனின் ரஷ்யாவிற்கு அடுத்த நிலையில் முக்கியத்துவம் பெற்ற ஒரு நாடு.

சோவியத் அதிபர் கோப்பச் சேவின் தாராளவாதம் நாடுகளுக்கு இன்னும் சுதந்திரம் வழங்குதல் என்ற புதிய கொள்கைகளுக்கு அப்பால் அன்றைய அமெரிக்க அதிபர் றொனால் றீகன் செயற்பாடுகளினால் சோவியத் என்ற மாபெரும் சோசலிச சாம்ராஜ்யம் அன்று உடைந்தது.

இதில் ரஷ்யாதான் சோவியத்தின் மிகப் பெரிய நாடாகவும் சோவியத்தின் தொடர்ச்சியாகவும் உணரப்படும் நாடு. இதில் உக்ரேன் அதற்கு அடுத்த படியாக பேசப்பட்ட நாடு. சோவியத் யூனியனின் தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்து வெளிநாட்டு அமைச்சர்தான் ஷிவநாட்சே தான் உக்ரேனின் முதல் அரசுத் தலைவராக பொறுப்பெடுத்தார்.

கடந்த 30 வருடங்களாக இந்த நாடுகள் சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட சோசலிச கருத்தியலை தொடர்ந்தும் தமது ஆட்சி அதிகாரத்தில் காவிச் சென்றனவா என்பதற்கு பதிலாக இல்லை என்று கூறினாலும் அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை இந்த நாட்டு மக்களிடமும் கூடவே கம்யூனிச் சிந்தாத்தமான சமத்துவக் கொள்கைகளும் அந்த நாட்டு மக்களிடம் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

இது அண்மைக்கால்களில் இளைஞர்களிடம் அதிகம் உருவாகி வருவதை செய்திகள் கூறியும் நிற்கின்றன. அரசுகளிடம் இந்த அரசியலுக்கான செயற்பாடுகள் அதிகம் இருக்கவில்லை.

பொறிஸ் ஜெல்சன் ரஷ்யாவின் தலமைப் பொறுப்பை எடுத்தார். பொறிஸ் ஜெல்சன் அமெரிக்காவின் விருபத்திற்கு ஆடுபவராகவும் கூடவே அவரின் தனிப்பட்ட நடவடிக்கையினாலும் சோவியத்தின் விம்பத்தை அதனைத் தொடர்ந்த ரஷ்யாவின் அடையாளத்தின் உலக அரங்கில் ரொம்பவும் தாழ்நிலையிற்கு கொண்டு சென்றது வரலாறு.

சோவியத்தின் உடைவினால் உருவான நாடுகள் அனேகம் ரஷ்யாவின் மேற்கு கரையோரங்களில் தான் அதிகம் அமைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து நேட்டோ, வார்சோ என்று முதலாளித்துவ முகாம் சோசலிச முகாம் என்றிருந்து உலகம் முதலாளித்து முகாம் என்று ஏகபோகமாக தன்னை கட்டமைத்துக் கொண்டது.

அமெரிக்க முதலாளித்துவம் இனி உலகில் ரஷ்யா எழுத்து வர முடியாது…. ( அதுதான் முதல் அத்தியாயத்தில் கூறிய ‘சிங்கன் செத்தான்” கதை) சீனாவும் என்னுடன் நட்பாக இருக்கின்றது என் செயற்பாட்டை கேள்வி கேட்க யாரும் இல்லை என்று தனது சொல்லுக்கு கட்டுப்படாத இணைய மறுத்த அனைவர் மீதும் பொருளாதாரத் தடை போன்ற மிரட்டல்களால் தனது கைக்குள் கொண்டு வந்தது. இந்த வரலாற்றை நாம் 1990 களில் இருந்து அண்மைய காலம் வரை அவதானிக்க முடியும்.

இதற்கு மாற்றீடாக ஐரோப்பிய யூனியன் ஈரோ(Euro) என்று கொண்டு வந்தாலும் தனது மிக நெருங்கி சகாவான பிரித்தானியா மூலம் அதற்கும் முக்கணாங்கயிறு போட்டது தற்போது பிரித்தானியா பொது நாணயத்திற்குள் வராமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்தும் போய்விட்டது. வேறு வழியில்லாமல் ஐரோப்பிய யூனியனும் நேட்டோவின் இன்னொரு தம்பியாகி அதனுடன் பிணைந்து இணைந்துவிட்டது. இது வர்க்கக் குணாம்சத்தின் வெளிப்பாடுகள்.

இதேபோல் இந்தியா தென் ஆபிரிக்கா பிரேசில் சீனா ரஷ்யா போன்ற நாடுகளால் உருவான பிறிக்ஸ்(BRICS) என்ற கூட்டமைப்பும் ஒரு அளவிற்கு மேல் வளர விடப்படவில்லை அமெரிக்க டாலரின் செயற்பாடுகளால்.

குறிப்பாக அமெரிக்க டாலருக்கு மாற்றீடாக உலக சந்தையில் நாணய பரிமாற்றத்தை வேறு ஒரு நாணயத்தினால் மாற்றீடு செய்யப்படுவதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. சீனாவும் பொருளாதார வல்லரசாக தன்னை வளர்த்துக் கொண்டாலும் தனது யென் ஐ பொது நாணயமாக்க முடியவில்லை.

இந்நிலையில் தான் சிரியா இல்லாமல் செய்ய புறப்பட்ட அமெரிக்காவையும் அதன் நட்பு நேட்டோ செயற்பாடுகளையும் அவர்களால் ஒரு காலத்தில் உருவாக்கி வளர்த்து விடப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பின் செயற்பாடுகளின் முதுகெலும்பை உடைத்துக் காட்டி ‘சிங்கன் செத்தான்’ என்று கோஷம் போட்டவர்களுக்கு பதில் சொல்ல விளைந்திருக்கின்றது ரஷ்யா சில வருடங்களுக்கு முன்பு.

அதன் தொடர்ச்சியைதான் இன்று உக்ரேனில்…..

(கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது தொடரும்….)