நம்பிக்கைதான் வாழ்க்கை

அப்படியான ஒரு நிகழ்வுதான்…. வரலாறுதான்…. நவம்பர் மாதம் நிக்கரகுவா என்றும் சிறிய நாட்டில் நடைபெற்றிருக்கின்றது.

அமெரிக்காவிற்கு அருகில் தென் அமெரிக்காவில் ஏன் மத்திய அமெரிக்கா என்று கூடச் சொல்லலாம் லத்தீன் அமெரிக்கா என்று பலராலும் அறியப்பட்ட நாட்டில் நாலாவது தடவையாக அமெரிக்காவின் ஏகாதிபத்திய செயற்பாட்டை முதலாளிதுவத்தை எதிர்த்து சோசலிச பாதையில் தனது பயணத்தை நடாத்தும் அரசு மீண்டும் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுள்ளது.

சன்ட்டினிஸ்ட்டா என்ற முற்போக்கு புரட்சிகர அமைப்பு தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் மக்களால் அமர்த்தப்பட்டு இருக்கின்றது. அதன் தலைவராக இருப்பவர் டானியல் ஒடேகா. ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகளின் தலைவர்களின் வயதை ஒத்தவர். ஈழ விடுதலை அமைப்புகளின் ஒரு சில தலைவர்கள் போல் மக்கள் தலைவர் என்ற தோற்றப்பாட்டை உடையவர்.

பல விமர்சனங்களுக்கு அப்பால் கியூபாவிற்கு அடுத்ததாக அதிகம் நம்பிக்கையுடன் உலகம் எதிர்பார்க்கும் நாடாக இது இன்று வரை இருந்து வருகின்றது.

ஆனால் கியூபா, பிடல் காஸ்ரோவின் தலமையிலான 1958 புரட்சியிற்கு பின்பு தொடர்சியாக கியூபாவை ஆண்டு வருவது போலன்று நிக்கரகுவாவின் 1979 ம் ஆண்டு புரட்சியிற்கு பின்னர் முதல் தவணையாக ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்த சன்ட்டினிஸ்ட்டா டானியல் ஒடேகா தோல்வியடைச் செய்து அமெரிக்க சார்பு எதிர்ப் புரட்சிகர சக்தி கொன்ராஸ்(Contras) அமைப்பின் தலைவர் மக்களால்…? தெரிவு செய்து நாட்டின் தலைவராக அடுத்த ஒரு தவணை மட்டும் ஆட்சியில் இருந்தார் . இதற்கான காரணங்கள் புரியப்பட வேண்டும்.

புரட்சியின் போது ஏற்பட்ட அழிவுகளை கட்டியமைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை உருவாக்க சற்று கால அவகாசம் தேவை. ஆனால் புரட்சி வென்றதும் மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் புதிய அரச ஆட்சியை நோக்குவர்.

இதனை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம்… சிக்கல்கள் மக்களை சற்று ஏமாற்றம் அடையச் செய்யும் என்ற இயல்பான நிலை இங்கு மீண்டும் அமெரிக்க சார்ப்பு ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்தது. இது உலகில் விளிம்பு நிலை மக்களின் புரட்சியை எற்படுத்திய பல நாடுகளும் சந்தித்த ஒரு பொதுப் போக்குதான் இது.

ஆனால் அந்த ஆட்சி அதிகாரத்தில் இல்லாது இருந்து ஐந்து வருடங்களில் டானியல் ஒடேகா தலமையில் சன்ட்டினிஸ்ட்டாகள் மக்களை இடைவிடாது கிராமம் கிராமாக செற்று தமது கருத்தியலை சொல்லி வந்தனர்… மக்களுடன் வாழ்ந்தனர்.

இந்த கிராமங்களுக்கான நெடுந்தூரப் பயணங்களில் அவர்கள் குதிரைகளை அதிகம் தமது பயணத்திற்காக உபயோகித்தனர். சன்ட்டினிஸ்ட்டா களின் பாதுகாப்பையும் மக்களே உறுதியும் செய்தனர்.

எமது நாடு போலல்லாது மாற்றுக் கருத்தாளராக இருந்தாலும் டானியல் ஒடேக்காவின் முற்று முழுதான் எதிர் நிலைபாட்டை உடைய கொன்ராஸ் அமைப்பினர் அவர்களை கொன்றொழிக்க முடியவில்லை. டானியல் ஒடேகாவின் உயிர் வாழ்தலுக்கான அச்சுறுத்தலை கொலைகளை அவர்களால் செய்ய முடியவில்லை.

சர்வதேச சமூகத்திடம் சன்ட்டினிட்டுகள் பெற்றிருந்த தார்மீக ஆதரவு இதனை செய்யமுடியாமல் தடை போட்டது என்பது இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு சிறப்பாக தென் அமெரிக்க, லத்தீன் அமெரிக் நாடுகளும் கியூபா தலமையும் இதற்கான செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தனர். கூடவே அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் ஜனநாயக முகமும் காரணங்களாக அமைந்தன.

அதனையும் விட அமெரிக்க சார்பு எதிர் புரட்சிகர சக்திகளின் கொலை அச்சுறுத்தல்களில் இருந்து டானியல் ஒடோவும் அவர்களது சகாக்களையும் பாதுகாத்து காப்பியதில் நிக்கரகுவாவின் மக்களின் தியாகங்கள் அளப்பரியன.

அதன் பின் ஐந்து வருடங்களில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஆட்சித் தலைவராக டானியல் ஒடேக்கா தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்தார் போல் 2021 நவம்பரில் நடைபெற்ற தேர்தல் வெற்றியுடன் தனது நான்காவது தவணையில் காலடியும் எடுத்து வைத்துள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள்.

அமெரிக்க ஆளும் வர்க்கம் தமது நாட்டுத் தேர்தலை விட அதிகம் நிக்கரகுவா தேர்தலை அவதானிப்பது பலருக்குத் தெரியாது டானியல் ஒடேகாவின் தலமையிலான சன்ட்டினிட்ஸ்டா களின் தோல்வி அமெரிக்காவிற்கு தேவையாக இருக்கின்றது.

எனவே நிக்கரகுவா சன்ட்டினிஸ்ட்டா களின் வெற்றியைத் தொடர்ந்து அன்றைய காலகட்டத்து அமெரிக்க புதிய தலைவர்கள் நிக்கரகுவாவின் தேர்தலை முறை தவறாக நடைபெற்றதாகவும் அமெரிக்காவால் அதனை ஏற்றுக் கொள்ளப்போவது இல்லை என்று பொருளாதாரத் தடைகளை அதிகம் போடுவதை வழமையாக கொண்டுள்ளனர்.

அது இம் முறையும் நடைபெற்றுள்ளது அவர்களைத் தொடர்ந்து அவர்களின் ஐரோப்பிய கூட்டாளிகளும் ஏனைய நேட்டோ நண்பர்களும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஒத்து ஊதுவார்கள்.

இம்முறை தேர்தல் வெற்றியின் பின்பு அமெரிக்காவும் ஏனைய அவர்களின் நண்பர்களும் இவ்வாறே செயற்படுகின்றனர்.

இவற்றையெல்லாம் மீறி உலகின் பொலிஸ்காரனாக செயற்படும் அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் சமதர்மக் கொள்கைகளை தூக்கிப் பிடித்த வண்ணம் அமெரிக்காஇ அவர்களின் கூட்டாளிகளின் பொருளாதாரத் தடைகளையும் மீறி நிக்கரகுவா வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது இனியும் வாழும்.

வர்க்க அடிப்படையில் இரு வேறு வேறு கருத்தியலைக் கொணடவர்கள் போராட்ட வரலாற்றில் உருவாவது இயல்பானது. சமூகம் அவ்வாறுதான் கட்டமைக்கப்பட்டும் இருக்கின்றது.

ஆனால் கருத்துக்களை கருத்துகளால் சந்திக்கும் சூழல் அங்கு இருந்தமையினால் பல கருத்துகளும் உடைய பன்முகத் தன்மையை பேணும் பல தலைவர்கள் உயிர்வாழ்தல் நிக்கரகுவாவில் சாத்தியமாயிற்று.

அதுதான் அந்த போராட்டம் வென்றதற்கும் அது இன்றுவரை உயிர்திருப்பதற்கும் காரணம் ஆகும்.

இதனை நாம் எமது போராட்டத்திலும் கைக் கொண்டிருக்க வேண்டும்.

உலகத்தை திரும்பி பார்க்க வைத்த பசுபிக் அந்திலாந்து சமுதிரங்களை இணைக்கு 270 கிலோ மீற்றர் நீளமான நிக்கரகுவாவின் மனாகுவா(Managua) ஏரியை ஊடறுத்து அமைக்கப்பட்டு உலகின் மிகப் பெரிய கடற் பயணத்திற்கான பாதை முழுமை பெறாமல் போகுமோ..? என்ற நிலமை ஏற்பட்டுள்ளது.

சீன நாட்டின் பெரு நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட நிதிப் பற்றாக் குறை ஏற்படுத்தியுள்ளது இதனை ஏற்படுத்தியுள்ளது.

கூடவே நிக்கரகுவாவின் பழங்குடி மக்களின் இயற்கை சார்ந்த வாழ்வை இந்த கால்வாய் அமைப்புகளின் பிரதேசங்கள் ஏற்படுத்தி வருவதினால் அந்த மக்களின் அதிருப்த்தியிற்கும் உள்ளாகி இருக்கின்றது.

இந்த கால்வாய் அமைத்தலும் அதன் பாவனையும் சரியாக அமைந்து முடியுமாயின் உலக மக்களின் அதிக கவனத்தை பெறும் நாடாக நிக்கரகுவா மாற்றம் பெறும் என்பதில் ஐயம் இல்லை.

விவசாயமும் உல்லாசப் பயணத்துறையும் இவர்களது பொருளாதார ஈட்டலுக்கான அடித்தளங்களாக இருக்கின்றன.

மல்யுத்தம் வலைப்பந்தாட்டம் பேஸ் போல் என்பன அதிகம் விருபத்துடன் ஆடப்படும் விளையாட்டுகள்.

சோத்துக் குழையலும்இ இசையும்இ கவிதையுமாக கிராமிய வாழ்வியலைக் கொண்டிருக்கும் அந்த மக்கள் வாழ்வுடன் அவர்களது பாராளுமன்றத்தில் உரையாற்றிய அனுபவங்களைக் கொண்டதே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் ஆட்சியாளர் தோழர்களின் உறவு.

ஒருவேளை ஈழம் என்பது ராஜீவ் காந்தியின் தொடர்ந்த உயிர் வாழ்தலுடன் நடைபெற்றிருந்தால் ஈழத்தை அங்கீகரிக்க காத்திருந்த முதன்மை நாடாக நிக்கரகுவா இருந்திருக்கும் என்றளவிற்கான உறவுகள் எல்லாம் கனவாகிப் போன அந்த 1980 களின் இறுதிக் கால கட்டங்கள் 1990 இன் ஆரம்பமும் ஆகிப் போனவை இவ்விடத்தில் நினைவில் வந்து போகின்றது.

நிக்கரகுவாவின் விடுதலைப் போராட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இன்று வரை தாக்கு பிடித்து நாட்டை கட்யெழுப்பும் செயற்பாட்டை முழுமையாக புரிந்த கொள்வதற்கு அதன் நூற்றாண்டு வரலாற்றை நாம் அறிந்த கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியம் நிலச்சுவாந்தாருக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி நீண்ட நெடிய போராட்டத்தின் இறுதியில் கிடைத்த அந்த வெற்றியை இன்றுவரை மக்கள் நலம் சார்ந்து காத்து நிற்பதே நிக்கரகுவாவின் வெற்றியாக நாம் பார்க்க முடியும்.

ஆனாலும் இன்னும் அவர்கள் பயணிக்க வேண்டி தூரங்கள் அதிகம் இதற்கு இடையில் உருவான இந்த அரசை சிந்தனையை வீழ்த்துவது என்று தென் அமெரிக்கா, மத்திய, லத்தீன் அமெரிக்கா எங்கும் அமெரிக்கா நடாத்திவரும் அரசியல் சடுகுடுக்கள் நின்று போகப் போவதும் இல்லை.

எனது வாசிப்பின் அடிப்படையில் இந்த தசாப்த காலத்து நிக்ககுவா வரலாற்றை இங்கு கீழே தொகுத்து தந்துள்ளேன் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்தும் வாசியுங்கள்….

***********************************************************************

நிக்கராகுவான் புரட்சியானதுஇ அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சொமோசா அடக்குமுறைஇ சர்வாதிகாரம் ஆகிய இரண்டிலிருந்தும் சிறிய மத்திய அமெரிக்க நாட்டை விடுவிப்பதற்கான ஒரு தசாப்த கால செயல்முறையாகும். இது 1960 களின் முற்பகுதியில் சாண்டினிஸ்டா நேஷனல் லிபரேஷன் ஃப்ரண்ட் (FSLN) ஸ்தாபனத்துடன் தொடங்கியதுஇ ஆனால் 1970 களின் நடுப்பகுதி வரை அது உண்மையில் அதிக முன்னேற்றத்தை கண்டிருக்கவில்லை.

இது 1978 இல் ஆரம்பித்து 1979 கால கட்டம் வரை சாண்டினிஸ்டா(FSLN) சோமோசா(Somoza) இன் நிக்கரகுவா அரசின் கிளர்ச்சியாளர்களுக்கும் தேசிய காவலர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இறுதியல் FSLN சர்வாதிகாரத்தை தூக்கியெறிவதில் வெற்றி பெற்றது. புரட்சி முடிவுக்கு வந்த ஆண்டாகக் கருதப்படும் 1979 முதல் 1990 வரை சாண்டினிஸ்டாக்கள் ஆட்சி செய்தனர்.

FSLN இன் இலக்குகளாக தேசிய இறையாண்மைக்கான சாண்டினோவின் போராட்டத்தைத் தொடர்வது, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் நிகரகுவா தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சோசலிசப் புரட்சியை அடைவது.

1937 முதல்இ நிகரகுவா ஒரு சர்வாதிகாரியான அனஸ்டாசியோ சொமோசா(Somoza) கார்சியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது, அவர் அமெரிக்க பயிற்சி பெற்ற தேசிய காவலர் மூலம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான ஜுவான் சகாசாவை அகற்றினார். சோமோசா(Somoza) அடுத்த 19 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இவர் முதன்மையாக தேசிய காவலரைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், அமெரிக்க தேசிய காவலரை திருப்திப்படுத்துவதன் மூலமும், தேசிய காவலர் மோசமான ஊழல், சூதாட்டம், விபச்சாரம் மற்றும் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டார். மேலும் குடிமக்களிடம் லஞ்சம் கோரினார்.

அரசியல் விஞ்ஞானிகளான தாமஸ் வாக்கர் மற்றும் கிறிஸ்டின் வேட் ஆகியோரின் பாதுகாவலர்கள் ஒருவித மாஃபியா சீருடையில் இருந்தார்கள். இவர்கள்தான் சோமோசா குடும்பத்தின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர்கள்.

இரண்டாம் உலகப் போரின் போது நிகரகுவாவில் ஒரு இராணுவ தளத்தை நிறுவ சோமோசா அமெரிக்காவை அனுமதித்தார். மற்றும் CIA க்கு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குவாத்தமாலா ஜனாதிபதி ஜாகோபோ ஆர்பென்ஸை அகற்றும் சதித்திட்டத்தைத் திட்டமிடுவதற்கான பயிற்சிப் பகுதியை நிக்கரகுவாவில் வழங்கினார்.

சோமோசா(Somoza) 1956 இல் ஒரு இளம் கவிஞரால் படுகொலை செய்யப்பட்டார். இருப்பினும், அவர் ஏற்கனவே வாரிசு அரசியல் திட்டங்களைச் செய்திருந்தார். அவரது மகன் லூயிஸ் உடனடியாக அதிகாரத்தை ஏற்றுக்கொண்டார். மற்றொரு மகன் அனஸ்டாசியோ சோமோசா டெபயில், தேசிய காவலர் தலைவராக தொடர்ந்தும் செயற்பட்டார். கூடவே தனது அரசியல் போட்டியாளர்களை சிறையில் அடைத்தார்.

லூயிஸ் தொடர்ந்து அமெரிக்காவுடன் மிகவும் நட்பாக இருந்தார். கூடவே சிஐஏ ஆதரவு பெற்ற கியூபாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் நிக்கரகுவாவில் இருந்து கியூபாவிற்கு எதிராக செயற்படுவதற்கான எல்லாவித உதவிகளையும் செய்தார்.

சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி(FSLN) 1960 இல் கார்லோஸ் பொன்சேகா, சில்வியோ மயோர்கா மற்றும் டோமஸ் போர்க் ஆகியோரால் நிறுவப்பட்டது. இவர்கள் கியூபப் புரட்சியின் வெற்றியால் ஈர்க்கப்பட்ட மூன்று சோசலிஸ்டுகள்.

1920 களில் நிகரகுவாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய அகஸ்டோ சீசர் சாண்டினோவின் நினைவாக FSLN பெயரிடப்பட்டது. அவர் 1933 இல் அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதில் வெற்றி பெற்ற பிறகு, அவர் 1934 இல் முதல் அனஸ்டாசியோ சொமோசாவின் உத்தரவின் பேரில் தேசிய காவலர் பொறுப்பில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

1960 களின் போது, பொன்சேகாஇ மயோர்கா மற்றும் போர்ஜ் அனைவரும் நாடுகடத்தப்பட்டு நிக்கரகுவாவிற்கு வெளியில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது (FSLN உண்மையில் ஹோண்டுராஸில் நிறுவப்பட்டது). எஃப்எஸ்எல்என்(FSLN) தேசிய காவலர் மீது பல தாக்குதல்களை நடத்தியது. ஆனால் அவர்களுக்கு போதுமான ஆட்கள் அல்லது தேவையான இராணுவ பயிற்சி இல்லாததால் பெரும்பாலும் தோல்வியடைந்தது.

எஃப்எஸ்எல்என்(FSLN) 1970 களின் பெரும்பகுதியை கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் தங்கள் தளங்களை உருவாக்கியது. ஆயினும்கூட, இந்த புவியியல் ரீதியல் ஏற்பட்ட பிளவுச் செயற்பாடு FSLN இன் இரண்டு வெவ்வேறு பிரிவுகளை உருவாக்கி இருந்தது.

மேலும் மூன்றாவது பிரிவு மற்றைய இரு பிரிவுகளையும் இணைத்து டேனியல் ஒர்டேகா தலைமையில் உருவானது இறுதியில் . 1976 மற்றும் 1978 க்கு இடையில், இந்த மூன்று பிரிவுகளுக்கும் இடையில் தொடர்புகளைப் பேண முடியவில்லை.

மேலும் FSLN மூன்று கருத்தியல் போக்குகள் அல்லது பிரிவுகளாகப் பிரிந்து செயற்பட்தற்கான காரங்களா அவை நகரங்களில் மட்டும் புரட்சிகரக் கலங்களை அமைப்பதா, படிப்படியாக நாடு முழுவதும் ஆதரவைத் திரட்டுவதா அல்லது வளர்ந்து வரும் பிற அரசியல் குழுக்களுடன் ஒன்றிணைவதா என்பதில் வேறுபாடுகளை கொணடிருந்தன.

1978-79 இன் நிகரகுவான் புரட்சியானது டேனியல் மற்றும் ஹம்பர்டோ ஒர்டேகா சாவேத்ராவின் தலைமையில் மூன்று பிரிவுகளும் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியாக சாண்டினிஸ்டாக்களை மீண்டும் ஒன்றிணைத்தது சாத்தியமாக்கியது. அதனால் அப்போது சுமார் 50000 போராளிகளைக் கொண்ட FSLN நிக்கரகுவா அரசின் தேசிய காவலர் படையைத் தோற்கடித்து ஜூலை 1979 இல் சோமோசாவை வீழ்த்தியது.

ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட தேசிய செயலகம், ஒவ்வொரு பிரிவிலிருந்தும் மூன்று கமாண்டன்ட்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஒரு மத்திய குழு FSLN ஐ வழிநடத்தவும், டேனியல் ஒர்டேகா தலைமையிலான ஆளும் ஆட்சிக்குழுவுக்கான கொள்கையை அமைக்கவும் அமைக்கப்பட்டது.

நிக்கரகுவாவில் ஆட்சிக்கு வந்ததும், FSLN தன்னை உள்ளூர் மற்றும் பிராந்திய குழுக்களாக ஒழுங்கமைத்து, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற குழுக்களின் வெகுஜன அமைப்புகளின் மூலம் ஆதரவைக் கட்டியெழுப்பியது.

கான்ட்ராஸ்(Contras) எனப்படும் எதிர்புரட்சிகரப் படைகளின் (A rightist collection of counter-revolutionary groups) நிக்கரகுவாவில் அமைந்து சன்ட்டினிஸ்ட களின் அரசை வீழ்த்துவதற்கு தாக்குதல்களை அயல்நாடான ஹொண்டுராஸை தளமாக கொண்டு அமெரிக்க ஆதரவு நிதி ஆயுத உதவிகளுடன் செயற்பட்டனர்

ஹம்பர்டோ ஒர்டேகா 500000 பேர் கொண்ட சாண்டினிஸ்டா பாப்புலர் ஆர்மியை உருவாக்கினார். எதிர்புரட்சிகர சக்திகளின் உளவு மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக அமைந்த நிகரகுவா புரட்சிகர அரசை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. சாண்டினிஸ்டா தலைமையின் பல்வேறு மார்க்சிஸ்ட் அல்லாத உறுப்பினர்களின் ராஜினாமாக்கள் செய்தனர்.

இதனால் முக்கியமாக அரசியல் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளின் அடிப்படையில் கட்சியும் நிகரகுவாவும் படிப்படியாக இடதுசாரிக் கருத்தியல் பக்கம் தள்ளியதுஇ புதிதாக அமைந்த அரசு சோவியத் யூனியன் மற்றும் கியூபாவின் ஆதரவைச் சார்ந்து இருந்தன.

ஆட்சிக்கு வந்ததும் சாண்டினிஸ்டா அரசாங்கம் சோமோசா குடும்பத்தின் பரந்த நில உடமைகளை பறிமுதல் செய்தது. மற்றும் நாட்டின் முக்கிய தொழில்களை தேசியமயமாக்கியது. ஆனால் சோவியத் பாணி சோசலிச பொருளாதாரங்களின் பொதுவான மத்திய திட்டமிடல் முறையை செயற்படுத்தவில்லை மாறாக தங்கள் நாட்டுச் சூழலுக்கு ஏற்ற சோசலிச கட்டுமானங்களை செயற்படுத்து முயன்றது. அதன் போக்கில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தனியார் பண்ணைகள் மற்றும் வணிகங்கள் தொடர்ந்தும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது.

அரசியல் பன்முகத் தன்மையிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட FSLN மிதவாத எதிர்ப்புக் குழுக்களை வெறுப்புடன் பொறுத்துக்கொண்டது. தேர்தலை நடத்தாது அதிகாரத்தை ஆரம்பத்தில் தொடர்ந்த அவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏற்பட்ட கணிசமான அழுத்தத்திற்குப் பின்னரே தேர்தலுக்கு ஒப்புக்கொண்டதனர்.

1984 இல் FSLN ஒரு புதிய தேசிய சட்டமன்றத்தில் 96 இடங்களில் 60 க்கும் அதிகமான இடங்களை வென்றது.

எதிர்க்கட்சிகளுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை என்று பரவலாக விமர்சிக்கப்பட்ட தேர்தலில் டேனியல் ஒர்டேகா வெற்றி பெற்று ஜனாதிபதி பதவியை ஏற்றார்.

இருப்பினும் 1990 இல் போர் மற்றும் பொருளாதார மந்தநிலையால் சோர்வடைந்த நிக்கராகுவா மக்கள் தேசிய எதிர்க்கட்சி யூனியனின் 14 கட்சிகளுக்கு வாக்களித்தனர். இது சாண்டினிஸ்டாக்கள் அதிகாரத்தை கைவிட அமெரிக்க ஆதரவு கொன்ராஸ்ர்(Contras)கள் அரசாங்கத்தை அமைத்தனர்.

எதிர்க் கட்சியாகக் குறைக்கப்பட்டாலும்…. செயற்பட்டாலும் … நாட்டின் இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளில் FSLN கணிசமான அதிகாரத் தளத்தைத் தக்க வைத்துக் கொண்டது. தேசிய தேர்தல்களிலும் அது பலமாக செயல்பட்டது.

மீண்டும், 1996 இல் சன்டினிஸ்டாக்கள் பாராளுமன்றத் தேர்தலில் 37 சதவீத வாக்குகளைப் பெற்றனர். 2001 இல் கட்சி 42 சதவீத வாக்குகளைப் பெற்று 90 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் 43 இடங்களை வென்றது. FSLN அதன் தலைவரான ஒர்டேகா 2006 இல் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மீண்டும் அதிகாரத்தைகைப்பற்றியது.

2009 ஆம் ஆண்டில் நிகரகுவான் உச்ச நீதிமன்றம், ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக பதவியில் இருப்பதில் இருந்து தடுக்கப்பட்ட அரசியலமைப்பு தடையை நீக்கியது. 2011 இல் ஒர்டேகாவின் மறுதேர்தலுக்கு வழி வகுத்தது.

தேசிய சட்டமன்றத்தில் “பெரும்பான்மை” பெற்ற பின்னர், FSLN ஜனாதிபதியை நீக்கிய சரத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கியது. அதனைத் தொடர்ந்து 2016 இல் ஒர்டேகாவின் மறுதேர்தலுக்கான களத்தை அமைத்தது. மீண்டும் 2021 தேர்தலில் FSLN தனக்கான தேர்தல் வெற்றியை உறுதி செய்து கொண்டது.