ரஷ்யாவின் எச்சரிக்கையும், புவி அரசியலும்

கொரோனா பரவலை தடுப்பதில் தோல்வி. தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களும், இறப்பவர்களும் உலகின் மற்ற பகுதிகளை விட மிக மிக அதிகம். தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கிய சட்டத்தை உச்சநீதிமன்றத்தில், தற்போது பெரும் பான்மையாக உள்ள குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் தடை செய்துள் ளனர்.

பணவீக்கம் எல்லா காலத்தைவிட அதிகமாக உள்ளது. இத்தகைய காரணங்களால் மக்கள் பைடன் மீதான நம்பிக்கையை இழந்துள் ளனர். இதனால் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், ஏகாதிபத்திய அர சியல் பொருளாதார அரங்கில் மைய சக்தி யாக உள்ள பென்டகன் – இராணுவ உற்பத்தி நிறுவனங்களின் கூட்டணியின் விருப்பப்படியும் ரஷ்யா மீதும், சீனா மீதும் கடுமையாக மோத முயல்கிறார். அதேபோன்று ஏகாதிபத்திய முகாமின் மற்றொரு முக்கியப் பங்காளியாக உள்ள பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்ச னுக்கு எதிராக அவரது கட்சியினரே போர்க் கொடி உயர்த்தியுள்ள நிலையில் பிரிட்ட னும் இந்த கோரஸில் குரலை உயர்த்தி கோஷம் போடுகிறது.

நடந்தது இதுதான். உக்ரைனில் ஒரு பொம்மை அரசை ஏகாதிபத்திய சக்திகள் வைத்துக் கொண்டு, ரஷ்யாவிற்கு எதிராக தங்கள் விளையாட்டுகளை நடத்தி வரு கின்றன. இந்த நிலையில், சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு முன்னாள் சோவியத் நாடுகளில், அமெரிக்காவோ அல்லது நேட்டோவோ விஸ்தரிக்கக் கூடாது என்ற நிபந்தனையை நேட்டோ ஏற்கெனவே ஏற்றுக் கொண்டதாக ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது, உக்ரை னில் நேட்டோ, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியன தங்கள் படைகளை மிகப் பெரிய அளவில் திரட்டி நிறுத்தி வருகின்றனர். ரஷ்யா நடப்பவைகளை கூர்ந்து கவ னித்து, உக்ரைனில் இத்தகைய நிரந்தர நேட்டோ தளம் அமைத்தால் அதனை முறியடிப்பதற்கு எதிர் வினைகளை செய்து வருகிறது.

உண்மையில் உக்ரைனில் ஜனநாயக ரீதியில் நடந்த தேர்தலில் வென்று ஜனாதி பதியானவர் விக்டர் யானுக்கோவிச். 2013ல் அவரது ஆட்சியை கைக்கூலிகள் மூலம் அகற்றிய ஏகாதிபத்திய நாடுகள், அங்கு தற்போதைய ஜனாதிபதி விளாடி மிர் செலினிஸ்கி என்பவர் தலைமையில் தங்கள் பொம்மை அரசை நிறுவியுள்ள னர். இதற்கு எதிராக நாடு முழுவதும் கல வரம் வெடித்துக் கிளம்ப, உக்ரைன் இராணு வத்தை அமெரிக்க-நேட்டோ நாடுகள் தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து ஏராள மான மக்களை கொன்று குவித்தன. இருப்பினும், கிரீமியா பகுதி ரஷ்யா வுடன் இணைய விருப்பம் தெரிவித்த நிலை யில், அங்கு ரஷ்ய இராணுவம் சென்றது.

அங்கு நடந்த வாக்கெடுப்பில் மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்தனர். உக்ரைனின் கிழக்கு பகுதியிலும், தெற்கிலும் இன்னமும் மக்கள் பொம்மை ஜனாதிபதி செலினிஸ்கிக்கு எதிராக போராடி வருகின்றனர். அவர்களை அமெ ரிக்க நேட்டோ இராணுவ அதிகாரிகள் துணையோடு உக்ரைன் இராணுவம் தொடர்ந்து அடக்கி வருகிறது.

ஏகாதிபத்திய ஊடகங்களின் கூவல்

அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் நோக்கங்களுக்காக செயல்படும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய பிரச்சார ஊடகங்கள்(சிஎன்என், பிபிசி, பிரான்ஸ் 24 போன்றவை) தற்போது ரஷ்யா தனது நாட்டின் உள்ளே, தனது துருப்புகளை நகர்த்தியிருப்பதை 24மணி நேரமும் கதறி கதறி கூவிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவை ஒரு முறைகூட மறந்தும், அமெரிக்கா தனது சிறப்பு துருப்புகளையும், இராணுவ தளவாடங் களையும் உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது என்பதையோ, நோட்டோ படைகள் ஸ்லோ வேனியாவிலிருந்து உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதையோ, ஜெர்மன் துருப்புகள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டது குறித்தோ, சுவீடனின் துருப்புகள் அதன் ரஷ்ய எல்லைப் பகுதி யான காட்லாந்து தீவுப் பகுதிக்கு அந்த பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக குவிக்கப்பட்டுள்ளதையோ சொல்வ தில்லை.

உண்மையில், ரஷ்யாவை இராணுவ ரீதியாக சுற்றி வளைப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில், நோட்டோ விரிவாக்கத் தின் ஒரு பகுதியாக உக்ரைனில் ஒரு பெரிய இராணுவ தளத்தை நிறுவ அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் முயல்கின்றன என்ற உண்மையைச் சொல்ல மறுக் கின்றன.

ஜனாதிபதி புடின் தெள்ளத் தெளிவாக இது குறித்து பேசி, ஏற்கனவே நேட்டோ அறிவித்திருந்த உறுதி மொழியின்படி முன்னாள் சோவியத் யூனியன் பிரதேச த்தில் எந்த நேட்டோ படையும் குவிக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தைக் கேட்கிறார்.

ஆனால், அதுகுறித்து பைடனோ அல்லது அமெரிக்க அரைவேக்காட்டு வெளியுறவு மந்திரி பிளிங்கனோ எதுவும் தெரிவிப்பதில்லை. மாறாக, ரஷ்யாவை யும் அதன் பொருளாதாரத்தையும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சேதாரங்களை உண்டாக்குவோம் என கொக்கரிக்கிறது ஏகாதிபத்தியம். கடந்த ஜனவரி 21 அன்று அமெரிக்க வெளியறவு அமைச்சருக்கும், ரஷ்ய வெளியுறவு அமைச்சருக்கும் நடைபெற்ற 90 நிமிட பேச்சு வார்த்தையின் இறுதியில் எதிர்பார்த்தபடி எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஆனால், இந்த முறை ரஷ்யா தெள்ளத் தெளிவாக ஒரு விஷ யத்தை முன்வைத்துள்ளது; இந்த பேச்சு வார்த்தைக்குப் பின் சுமார் 30 நிமிடங்கள் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது ரஷ்யாவின் நிலைமையை தெளிவாக எடுத்துரைத்தார். உக்ரைன் மற்றும் இதர முன்னாள் சோவியத் யூனியன் பகுதிகளில் நேட்டோ விரிவாக்கம் கூடாது; அதற்கான எழுத்துப்பூர்வமான உத்தர வாதத்தை அளிக்க வேண்டும். பதிலுக்காக முடிவில்லாமல் காத்திருக்க முடியாது, வரும் புதன் கிழமைக்குள்(ஜனவரி26) எழுத்துப்பூர்வமான பதில் தர வேண்டும் என்று மிக கண்டிப்புடன் ரஷ்யா தெரிவித்து உள்ளது.

பைப்லைன் திட்டம்

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதற்கு காசேதான் கடவுள். மத்திய கிழக்கு முழுவதையும் பதற்றத்தில் வைத்திருக்கும் நோக்கமே, அந்த பகுதியின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங் களில் மிக அதிக அளவில் அமெரிக்க பொருளாதாரம் பின்னிப் பிணைந்துள் ளது. இந்த நிலையில் ரஷ்யா, ‘நார்ட் 2’ எனப்படும் ஐரோப்பா முழுமைக்கும் இயற்கை எரிவாயு கொடுக்கக்கூடிய பைப்லைன் திட்டத்தை முடித்துள்ளது.

இந்த பைப்லைன் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனி வரை செல்கிறது. ஆகவே, ஜெர் மனியை பல வகையிலும் அமெரிக்கா இந்த திட்டத்திலிருந்து வெளியேற வைக்க முயன்றது. அது எதுவும் பலிக்காத நிலை யில், தற்போது, உக்ரைன் பிரச்சனை யுடன், நார்ட் பைப்லைன் திட்டத்தை முடக்க அமெரிக்கா முயல்கிறது. தற்போது எரிவாயு விலையை கத்தார் போன்ற நாடுகளுடன் இணைந்து அதிக விலைக்கு விற்க முயலும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு, ரஷ்ய பைப் லைன் திட்டம் பேரிடியாக இருக்கிறது.

இந்த திட்டம் மலிவாக இயற்கை எரி வாயுவை ஐரோப்பாவிற்கு அளிக்கும். ரஷ்யா உக்ரைனில் நுழைந்தால், அது எந்தளவுக்கு நுழைகிறதோ அந்தள வுக்கு ஏற்ப அதற்கு வாழ்நாளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் அமெரிக்கா ரஷ்யாவை தண்டிக்கும் என பைடன் மிரட்டுகிறார்.

ரஷ்யா பதிலுக்கு என்ன செய்யும் என்பது குறித்து யுரேஷிய பகுதி புவி அரசியல் நிபுணரும், “ஏசியன் டைம்ஸ்” இதழில் தொடர்ந்து எழுதி வருபவருமான பெப்பே எஸ்கோபர், ரஷ்யா இம்முறை தன்னை நேட்டோ வளைப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என திட்டவட்ட மாக தெரிவிக்கிறார்.

அதற்கு அவர் ‘மாடரேட் ரீபள்ஸ்’ என்ற சானலில் செய்தி யாளர் மேக்ஸிடம் தெரிவிக்கும் போது, ரஷ்யா வெனிசுலாவில் ஒரு இராணுவ தளத்தை, ஏவுகணைகளுடன் நிறுவக் கூடும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியம் தற்போது தொடர்ந்து தோல்விகளை தழுவுவதாக அவர் தெரிவிக்கிறார். ஆப்கானிஸ்தானில் மட்டுமல்லாது, அவர்களது ‘கலர் ரெவெல்யூஷன்’ எனப்படும் நிற புரட்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியதாக தெரிவிக்கிறார்.

உதாரணமாக வெனி சுலாவில் அமெரிக்காவிற்கு தோல்வி, கஜகஸ்தானில் தோல்வி, நிகரகுவாவில் தோல்வி, சிலியில் தோல்வி, பொலிவியா வில் தோல்வி எனப் பட்டியலிடுகிறார். ஏகாதிபத்தியம் தனது தோல்வியை அமைதியாக ஏற்றுக் கொண்டு போகாது என்பதும், பேரழிவை உண்டாக்கும் என்பதும் கடந்த இரண்டு உலகப் போர்களில் நாம் பார்த்துள்ளோம். புதன் கிழமைக்கு பிறகு நடப்பதை பார்ப்போம்.