ருவாண்டா படிப்பினைகள் – 01

இனச் சுத்திகரிப்பும் மீளெழலும்

(Thiruchchelvam Kathiravelippillai)


• தூய்மையான ஊர்களைக் கொண்ட நாடு.
• நெகிழி (Plastic) முழுமையாக தவிர்க்கப்பட்ட நாடு.
• 100 மலைகளைக் கொண்ட சுத்தமான காற்றுக்குச் சொந்தமான நாடு.
• 25 கிலோமீற்றர்களுக்குக் குறைவான தூரங்களை ஈருருளிகளிலும் அதிகமான தூரங்களை மின்பாவனை வாகனங்கள் மூலமாகவும் சென்றடையும் போக்குவரத்தினைப் பேணும் நாடு.
• இனம், சாதி போன்ற வேறுபாட்டினை மக்களிடையே திணிக்கும் அல்லது பேணும் முறைமைகள் அற்ற மனிதம் மாத்திரமே மனிதர்களிடம் தேவை என்பதனை போற்றும் நாடு.
• நாடாளுமன்றில், அமைச்சரவையில் 60 வீதமானவர்கள் பெண்கள்.
• தொழிற்துறையில் 60 வீதமானவர்கள் பெண்கள்.
• தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகமானவர்கள் வாலிபர்கள்.
• கிழமையில் ஒவ்வொரு குடிமகனும் தனது ஊரில் ஒரு மணிநேரம் சிரமதானத்தில் ஈடுபடுகின்ற உன்னத நடைமுறை.