ருவாண்டா படிப்பினைகள் – 01

இப்படி பல நற்பண்புகளுடன் சிறந்த வகையான நல்லாட்சியுடன் இயங்கிக்கொண்டிருக்கும் நாடு உலகில் உள்ளதா? என்று கேட்டால், நாம் வாழும் உலகில் இது கற்பனை என்று நமக்கு எண்ணத் தோன்றலாம். ஆனால் ஓம் என்பதே ஆச்சரியத்துடன் வியப்படையும் பதில்.

ருவாண்டா (Rwanda) தான் அந்த விடைக்கான நாடு.

சிறிலங்காவை விட மிக மோசமாக இனப்படுகொலை நடைபெற்று முடிந்தபின் மிகக் குறுகிய காலத்தில் வளங்கொளிக்கும் நாடாக ருவாண்டா இன்று மீண்டெளுந்து மிளிர்கிறது.

உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் ருவாண்டாவால் எப்படி இது சாத்தியமாயிற்று.?

இது சாத்தியப்பட சிறந்த வழிகாட்டல் தலைமைத்துவம் கரணீயமாயிற்று.

ருவாண்டாவின் தலைவராக இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிபுரியும் திரு.போல் ககாமே(Paul Gakame) அவர்களின் வழிகாட்டலும் அந்நாட்டு மக்களின் தலைமையை ஏற்கும் மனிதப்பண்புமே நாட்டை மேல்நிலைக்கு கொண்டு வருவதற்கும் மகிழ்ச்சியான வாழ்வை உறுதிப்படுத்துவதற்கும் வழிவகுத்தன.

“பிரான்சு நாட்டு நீதிபதிகள் எங்கள் நாட்டு இராணுவ அதிகாரிகளையும் எங்கள் நாட்டு அரசியல் தலைவர்களையும் மனித உரிமை மீறல்களுக்காக ஐரோப்பிய நீதிமன்றங்களில் விசாரிக்கின்றனர்.

கேட்டால் இது உலகிற்கே பொதுவான மனிதஉரிமைச் சட்டங்கள் என்கின்றனர்.

அப்படி உலகிற்கே பொதுவான மனிதஉரிமைச் சட்டங்கள் என்றால் ஆபிரிக்கர்களுக்கு எதிராக ஐரோப்பிய தலைவர்கள் செய்த கொடுரங்களை ஏன் ஆபிரிக்காவில் ஆபிரிக்க நீதிபதிகளால் ஆபிரிக்க நீதிமன்றங்களில் விசாரிக்க ஐரோப்பியர்கள் அனுமதிக்கவில்லை.

நாங்களும் மனிதர்கள் தானே?”

என உலகைப் பார்த்து துணிந்து கேள்வி கேட்ட ருவாண்டா நாட்டின் தலைவர் திரு.போல் ககாமேயை உலகமே நிமிர்ந்து பார்த்தது.

மனிதத்தினையும் சூழலினையும் மதித்து ஆட்சி நடாத்துகின்ற திரு. போல் ககாமேயைப் பற்றி அறிவதற்கு ருவாண்டா நாட்டைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

(ருவாண்டா ஆபிரிக்காவின் சுவர்க்க பூமி அடுத்த பகுதியில்)