வாழ விடு War விடு (பகுதி 5)

சிறப்பாக இந்த மக்களுக்கு எதிரான குண்டு வீச்சில் இஸ்ரேல் பக்கமாக நிற்கும் அமெரிக்கா, அதன் துணை போகும் நாடுகளில் இந்தப் போராட்டங்கள் அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெறுகின்றன.

நான் வாழும் நாடு கனடாவில் ரொரன்ரோ இல் இன்று இதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ன. மிகவும் அமைதியாதன முறையில் புத்திசாலித்தனமாக போராட்டங்கள் நடைபெற்றதை அதில் இணைந்து போது என்றால் உணர முடிந்தது.

இந்தப் போராட்டத்தில் எங்கும் அந்த வெண்ணிறதில் கறுப்பு(இந்த புள்ளிகள் சிவப்பு வேறு நிறங்களிலும் காணமுடிந்தது) புள்ளிகள் இட்ட துணியால் தலைகள் மறைக்கப்பட்ட மனிதர்களையே அதிகம் காணக் கூடியதாக இருந்தது.

போராட்டகாரர்களின் முக்கிய கோசமாக காசா மீதான குண்டுத் தாக்குதலை நிறுத்து பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்து குழந்தைகளின் மரணம் ஏனைய அழிவுகளை பிரதானமாக புள்ளி விபரங்பகளுடன் இணைத்த பதாகைகளுடனான போராட்ங்கள் என்றாக நடைபெற்றதே…. இந்த போராட்டத்தின் வெற்றிகளாக என்னால் உணர முடிந்தது.

எங்கும் எதிலும் அரேபிய பாலஸ்தீன மக்களின் போராட்ட அமைப்பு ஒன்றின் பதாகையோ அல்லது தலைவர்களின் புகைப்படங்கள் தாங்கிய பiதாகையோ அங்கு காணமுடியவில்லை.

மாறாக பாலஸ்தீன மக்களை அடையாளப்படுத்தும் அது முஸ்லீம்கள் என்பதற்கு அப்பால் வெள்ளை துணியில் கறுப்பு புள்ளிகள் இட்ட தலைப்பாகை போன்ற கவசங்களுடன் ஆண்களும் பெண்கள் இது போன்ற துணிகளால் முக்காடு போட்ட வண்ணமும் சிலர் இதனால் தம்மை போர்த்திய வண்ணம் சிறப்பாக குழந்தைகள் காட்சியளித்தனர்.

யாசீர் அரபாத் காலத்தில் பிஎல்ஓ(PLO) அமைப்பு இந்த அடையாளத்தை அறிமுகப்படுத்தி மத அடையாளங்களுக்கு அப்பால் தேசத்தின் அடையாளமாக அணைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கி பாலஸ்தீனம் என்றாக உலகிற்கு அடையாளப்படுத்திய வெற்றியாக இந்த போராட்டங்களில் இந்த தலைப்பாகை காணமுடிந்தது.

கத்தோலிக்கர்கள் ஏன் முஸ்லீம்களில் உள்ள பல பிரிவுகளில் உள்ளவர்கள் யூதர்கள் என்றாக பலரையும் பாலஸ்தீன பிரஜைகளாக அடையாளப்படுத்துவதில் அவர்கள் கண்ட வெற்றி இந்த வெள்ளை துணியில் கறுப்பு குற்றுகளை உடைய அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கூடவே தமது தேசத்தில் தேசியக் கொடியை தம்முடன் இணைத்தும் கொண்டனர் இது பாலஸ்தினர்களின் பல பிரிவினர்களை தனியாக காட்டாது அவர்களின் ஒருமைப்பாட்டைக் காட்டும் இணைக்கும் வெற்றியாகவும் உணர முடிந்தது.

இது போன்ற போராட்டங்களை இன்று தாயத்து கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்டதாகவும் அறிந்து கொண்டேன்.

ஜேஆர்; காலத்தில் இஸ்ரேல் உடனான புதிப்பிக்கப்பட்ட உறவும் அது சார்ந்து அமெரிக்க தூதுவராலயத்தில் அவர்களுக்கு விசேட பிரிவுகளை திறந்த போது ஈழவிடுதலைப் போராளிகளாக நாம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல போராடங்களை நடாத்தியது இன்று நினைவில் வந்து போனது.

தற்போது தமிழர் பேசும் தரப்பில் முஸ்லீம்களுக்கு அப்பால் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலின் குண்டு வீச்சிற்கு எதிராக வீச்சாக போராட்டங்கள் நடைபெறுகின்றனவா என்பதை இங்கு கேள்வியாக முன்வைத்து…

இந்த போராட்டங்களில் எந்த நாடுகள் இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றனவோ அந்த நாட்டின் ‘ஆதிக்க’ குடிகள் அல்லது பிரதான நீரோட்த்தில் உள்ள மக்கள் இணைந்து போரை நிறுத்துமாறும் பாலஸ்தீன மக்களின் வாழ்வை உறுதிப்படுத்தும் அவர்களுக்கான நாட்டை அங்கீகரி என்றதாக இணைந்து போராடும் வரை இந்த எழுச்சிகள் பலனைத் தருமா என்பதை வரலாற்றில் நடைபெற்ற சில நிகழ்வுகளை இங்கு கொண்டு வந்து அவற்றை முன்வைக்கின்றேன்.

இவை பற்றிய பலரின் இணைந்த கருத்தையும் எதிர்பார்க்கின்றேன்….

கடந்த கால வரலாறுகளில் இருந்து….

வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டம் 1970 களில் நடைபெற்றது. இதில் வியட்நாம் மக்கள் அதி நவீன ஆயுதங்களை கொண்டிருந்த அமெரிக்காவிற்கு எதிராகவே போராடினார்கள்.

அப்போது அமெரிக்கா வீசிய நாபாம் எரி குண்டு வியட்நாம் சிறுமி ஒருவளை எரிக்கும் நிலையில் அவள் நிர்வாணமாக அரைகுறையாக எரிந்த நிலையில் வீதியில் உயிரைக் காப்பாற்ற ஓடி வருகின்றாள்.

உலக ஊடகங்கள் இந்த காட்சியை புகைப்படமாக எடுத்து வெளியிடுகின்றார்கள்.

இதனைப் பார்த்த அமெரிக்க மக்களே அமெரிக்காவில் வீதிகளில் இறங்கி தமது நாட்டுப் படைகள் செய்யும் அட்டூளியங்களை கண்டித்து அமெரிக்க படைகள் வியட்நாமில் இருந்து வெளியேறுவதற்கும் கூடவே வியட்நாம் போராளிகள் அமெரிக்க இராணுவத்தை அடித்துவிரட்டுவதற்கும் காரணமாகியது.

இங்கு அமெரிக்க மக்களின் மனிதாபிமானமும் உலக மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும் வியட்நாம் மக்களின் வீரம் செறிந்த விடாப்பிடியான தம்மிடம் இருக்கும் வளங்களை கொண்டு போராடுவதும் கூடவே தமது போராட்டத்திற்குரிய தார்மீக ஆதரவை உலக அரங்கில் பெறுவதற்கு ஹோசிமின் தலமையிலான மக்கள் இயக்கம் செய்த அரசியல் வேலைகளும் காரணமாகின.

1993 ல் உணவு உதவி அளிக்கும் சாக்கில் சோமாலியாவிற்குள் அமெரிக்கா 30 ஆயிரம் படைகளை அனுப்பி, மொகதிஷ_வின் நாசகரமான போரினை அடுத்து, அதனை திரும்ப பெறுவதற்கு முன்பாக ஆயிரக்கணக்கான சோமாலியர்களை கொன்றது. 1993 கால கட்டங்களில் சோமாலியாவில் அமெரிக்கா இது போன்ற நடவடிக்கையை ஈடுபட்ட போது அதற்கு எதிர்வனையாக சோமாலிய மக்களின் போராட்டம் பொலிதீன் பைகளில் அமெரிக்க இராணுவ வீரர்களின் உடலங்களை திருப்பி அனுப்பியது.

இந் நிகழ்வுகள் அமெரிக்கா சோமாலியாவில் இருந்து நேரடி யுத்தத்தில் இருந்து தமது படைகளை திருப்பி அழைப்பதற்கு அழுத்தங்களை அமெரிக்க மக்கள் மத்தியல் ஏற்படுத்தியது.

அமெரிக்க மக்கள் தமது பிள்ளைகள் அநியாயமாக சாகின்றார்கள் என்ற தமது பிள்ளைகள் மீதான பாசம் அமெரிக்க அரசிற்கு அமெரிக்க மக்கள் கொடுத்த அழுத்தம் அன்று நேரடி யுத்தத்தில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக் கொள்வதற்கு அமெரிக்காவைத் தள்ளியது.

ஆனாலும் இன்னமும் அங்கு ஒரு சமாதானமான ஆட்சி ஏற்படவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணம் இன்றைய பூகோள அரசியலின் விளையாட்டுகளால் ஏற்பட்ட சிக்கலே காரணம் என்பதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

இதே போலவே தம்மால் வளர்க்கப்பட்டவர்களுக்கு எதிராக 911 தாக்குதலுக்கு பினன்ர் ஆப்கானிஸ்தானிற்குள் புகுந்த அமெரி;க இராணுவம் ‘போதுமடா சாமி…..’ ‘தாக்கு பிடிக்க முடியவில்லை…’ ‘யுத்த செலவுகள் கட்டுக்குள் அடங்கவில்லை….’ ‘தேடிய புதையலை எடுக்க மலைகளை அதிகம் குடைய வேண்டும்….’ என்றாக அங்கிருந்து வெளியேறியதற்கு பின்னாலும் அமெரிக்க மக்களின் அமெரிக்க அரசு மீதான அழுத்தங்களே காரணமாக இருந்தன.

ஆனால் இன்று இஸ்ரேல் நடாத்தும் பாலஸ்தீன மக்கள் மீதான கொலை வெறியாட்டம் இதற்கு முன்பே இருந்து பல ஆண்டுகளாக நடைபெற்றலும் அதனை தடுத்து நிறுத்துவதில் மற்றைய எவர்களையும் விட இஸ்ரேலிய ஆதரவு நாடுகளின் பிரதான் நீரோட்டத்தில் உள்ள மக்களின் கரங்கள் அதிகம் வலுவாக செயற்படவில்லை என்ற பார்வையை இங்கு முன்வைக்க முடிகின்றது.

இந்த போரை பாலஸ்தின மக்களின் அகதி வாழ்க்கையை அது அகதி முகாமில் பிறந்து அகதி முகாமில் ஆஸ்பத்திரியில் சாகும் வாழ்வை நிறுத்துவது இஸ்ரேல் மக்களால்தான் அதிகம் முடியும் என்றே நம்புகின்றேன்.

போகின்ற போக்கை பார்த்தால் குழந்தைகளின் மழலை கேட்காத தேசமாக பாலஸ்தீனம் மாற்றப்பட்டு வருவதாக உணர முடிகின்றது அவ்வளவு தொகை குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.

அழுகையில் கூட குழந்தைகளின் அழுகை மறைந்து போகும் அவலம் அளவிற்கு சென்று கொண்டிருக்கின்றது.

இதனை நிறுத்துவதற்கு சர்வதேசமும் ஒரு தரப்பில் நின்று செயற்பட்டாக வேண்டும் அல்லது இஸ்ரேலிய மக்கள் மனம் வைத்தாக வேண்டும் வியட்நாம் வரலாறுகளை ஹிட்டலர் காலத்தில் யூதர்களை காப்பாற்ற சோவியத் செய்த தியாங்களை சீர் தூக்கி பார்க்க வேண்டும்…

அதுவரை பாலஸ்தீனியர்கள் உயிர்வாழ்வும் வேண்டும்…..?