இன்று(14) உலக நீரிழிவு நாள்


எம்மிடம் வசதிகள் இருக்கோ இல்லையோ ஆனால் பெரும்பாலானவர்கள்
வசதிகள் உள்ளவர் போல வாழ முயற்சிக்கின்றோம்.
எண்ணம், உணவுப்பழக்கம், வசதிவாய்ப்புக்கள் என எல்லாமே
அப்படித்தான்.
மேற்குலகினர் அறிமுகப்படுத்தும்
சாதனங்களைப் பயன்படுத்தி உடலுழைப்பைக் குறைக்கும் நாம்
அவர்கள் உடல்நலத்தில் காட்டும்
அக்கறையைச் சிறிதேனும் நாம் காட்டுவதில்லை.
குறிப்பாக சீரான உடற்பரிசோதனை,
உடற்பயிற்சி எம்மிடம் அறவேயில்லை.
எம்முன்னொர் உணவே மருந்தென்றனர்.
அதை நாம் மறந்ததால் இன்று மருந்தை உணவாகக் கொள்ளும் நிலைக்கு மாறி
வருகிறோம்.
அளவுமீறிய எதிர்பார்ப்புக்களால் எம்மை
நாமே மனஅழுத்தத்தினுள் தள்ளுகிறோம்.
அதை எமது பிள்ளைகள் மீதும் சுமத்துகிறோம்.
உண்மையான இறைவழிபாடு உட்பட கூடிக் குலாவிப் பங்குகொள்ளும் சமூக
ஆற்றுப்படுத்தும் நிகழ்வுகள் எம்மிடையே
அருகிவிட்டன. சிரிக்க மறுக்கும் முகங்கள் பெருகிவிட்டன.
கிடைக்கும் மகிழ்வைத் தொலைத்துவிட்டு
இல்லாத மகிழ்வைத் தேடி ஓடுகிறோம்
போல் தெரிகிறது.
பலருக்கு இளமையில் விரும்பியதை உண்ணப் பணமிருக்கவில்லை.
இப்போது அவர்களிடம் பணம் நிறையவுண்டு. ஆனால் விரும்பியதை
உண்ண அவர்களால் முடியாதுள்ளது.
இந்த இரண்டுக்குமிடையில்தான்
எமது மகிழ்வான வாழ்க்கை உள்ளது.
சிந்திப்போம். எமது வாழ்க்கை முறையை
மீள ஒழுங்குபடுத்துவோம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என்பதை எப்போதும் மனத்தில் வைத்து
மகிழ்வோடு வாழ்வோம்.
இன்று(14) உலக நீரிழிவு நாள்