ஓ! மானே மானே உன்னைத்தானே.. எதிர்காலம்?

(எப். முபாரக்)

இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் பார்வையிடுவர். இதன்மூலம்  பெருமளவான அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரக்கூடிய ஒரு துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.  கடந்த வருடத்திலிருந்து, கொடிய நோயான கொவிட்- 19 பெருந்தொற்று நோயின் தாக்கம் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறை முடங்கியதோடு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாகச் செழித்து வருகின்றது.