கையூர் தியாகிகளின் கதை

(Maniam Shanmugam)
கையூர் தியாகிகளின் 77ஆவது நினைவுதினம் இவ்வாண்டு (2020) மார்ச் 29ஆம் திகதி கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்தத் தியாகிகள் பற்றி எனக்கு அக்கறை வந்ததிற்குக் காரணம், அவர்களது வீரப்போராட்டம் பற்றியும், தியாகம் பற்றியும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிரஞ்சனா என்பவர் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்றொரு எழுதிய நாவலை வாசித்த பின்னர்தான்.