சாவகச்சேரி மக்கள் போராட்டம் ஒரு அறச் சீற்றம்

(தோழர் ஜேம்ஸ்)

இலவசக் கல்வி இலவச மருத்துவம் என்பன இலங்கை மக்களுக்கு கிடைத்த உரிமைகள்…… வரப்பிரசாதங்கள்…..

இந்த இலவசக் கல்வியினால், மருத்துவத்தினால் கல்வியை ஆரோக்கியத்தைப் பெற்று உயர் கல்வி வரை பணம் ஏதும் செலுத்தாது தமக்கான சமூகத்திற்கான முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்தனர்.