மே 26, 2020: மீண்டும் ஒரு கறுப்பின அடிமையை கொல்லுதல்…..

(சாகரன்)
மே 26, 2020 ஒரு கறுப்பின அடிமையை கொல்லுதல் என்ற சிந்தனை மீண்டும் அரங்கேறிய நாள். உலகில் கறுப்பு, வெள்ளை, இடை நிறமான பழுப்பு நிறம் என்ற நிறப் பாகுபாடுகளில் வெள்ளையினமே மேன்மையானது என்ற பாகுபடுத்திப் பார்க்கும் வெளிப்பாடுகள் இன்று வரை உலகின் பொலிஸ்காரனாக தன்னை வரிந்து கட்டிய அமெரிக்காவில் குறைந்த பாடில்லை.