யாழ் இல் ஆறுமுகநாவலரின் வாரிசுகள்

(வி. சபேசன்)
·
யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டிருக்கிறாள். இன்னொரு ஆணுடன் தொடர்பு கொண்டிருந்தாள் என்கின்ற ஆத்திரத்தில் கணவனே கொலை செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதை பல ஈழத்து சங்கிகள் ஆதரித்து எழுதிக் கொண்டிருப்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.