காரல் மார்க்ஸ்

ஆனால், தோழர் மார்க்சின் பெயர் உலகெங்கும் தினசரி உச்சரிக்கப்பட்டே வருகிறது!வரலாற்று ஏடுகளில் அவரது பெயர் மங்காது சுடர்விட்டு ஜொலித்துக்கொண்டே இருக்கிறது!

காலம் அவர் பெயரில் துருப்பிடித்து அழித்திட அனுமதிக்கவில்லையே ஏன்?ஏன் மார்க்சின் பெயர் மட்டும் அழியாது அமரவாழ்வு வாழ்கிறது?

இந்த வினா, மனித உழைப்பு சக்தியை மனிதர் களிடமிருந்து விலைக்கு வாங்கி, உழைப்பு சக்தியின் மூலம் விளைந்த அதன் உபரியை, அபகரித்துக்கொண்டு, கொழுத்துப்பிழைக்கிற தனியுடைமைக் கட்டமைப்பைக் காப்பற்றத் துடிக்கும் மண்டைகளில் நண்டு போல் குடைந்து கொண்டே இருக்கிறது!

தோழர். கார்ல் மார்க்சின் அறிவு தனிமனித அறிவல்ல, முழு மொத்தமனிதகுல சிந்தனையின் விளைபொருள் அது!வையத்துள் மனிதகுலம் இன்பமுற்று அன்புடன் இணங்கி, வாழ்வாங்குவாழும் வழிவகை குறித்து சிந்தித்துச் சிந்தித்துப் பிரசவித்த, மனித குல அறிவுக் குழந்தைதான் மார்க்சிய தத்துவஞானம்!

இந்தக் குழந்தை மனிதகுல சிந்தனைக் கருவறையில் பல ஆயிரம் ஆண்டுகாலம் வளர்ந்து பிறந்தது!

இது ஒரு நெருப்புக்குழந்தை!இந்தப்புதுவித நெருப்பு மனித குலத்திற்கு தேவையானதை துளிர்க்க வைத்து வளர்க்கும்!

தேவையற்றதை எரித்து அழிக்கும்!அது உருவாக்கும் வாழ்க்கை முறைதான் விஞ்ஞான சோசலிச வாழ்க்கைமுறை!

அதன் முதிர்ந்த கட்டமே கம்யூனிச வாழ்க்கைமுறை!

அதை உலகிலும், இந்தியாவிலும் கட்டி அமைப்பதே மனிதகுலத்தின் வரலாற்றுக் கடமை!

அதை நோக்கிப் பயணிப்பதே, பயணிக்க வைப்பதே கம்யூனிஸ்டுகளின் தலையாயபணி!

இதைப் பெற்றெடுத்து,தாயும் தந்தையுமாய் இருந்து வளர்த்த தோழர் கார்ல் மார்க்ஸ் காட்டிய வழியில் பயணிப்போமாக! –