சின்மயா வித்யாலயா – RSS பின்புலம்.!

சங்கரன் சின்மயா வித்யாலயா என்று அழைக்கப் படும் இந்தப் பள்ளி ஆனது மும்பை மத்திய சின்மயா மிஷன் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது. இது ஒரு சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்ட பள்ளியாகும். இந்த சின்மயா மிஷன் அறக்கட்டளை இந்தியா, வெளிநாடு என 300க்கும் மேற்பட்ட மையங்களை செயல்படுத்தி வருகிறது. மும்பையில் இதன் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு உலகம் முழுவதும் உள்ள கிளைகளை நிர்வாகம் செய்வதற்கு என்று ஆறு நிர்வாகப் பிரிவுகள் உள்ளன.