ஜோதிகாவின் அண்மைய கருத்து…

விஷயம் ரொம்ப சிம்பிள்!

யாருக்கு கோபம் வருகிறது? யார் தாக்குகிறார்கள்? ஏன் தாக்குகிறார்கள்? என்ற கேள்விகளுக்கான பதிலை கண்டறிந்தால்,கிடைக்கும் பதிலில் இருக்கிறது இதன் முக்கியத்துவம்!

ஆன்மீக சொற்பொழிவு என்றால்,அது தங்களுக்கானது,அதில் சூத்திராள் நுழைய முடியாது. நுழைந்தாலும் அவர்கள் இது வரையிலுமாக நிலை நிறுத்தப்பட்டுள்ள பார்ப்பனிய சிந்தனையை தகர்க்கமுடியாது என்று இறுமாந்திருந்தவர்களின் கனவை நொறுக்கி வருகிறார் சிவகுமார்! தற்போது திருக்குறளையும் கையில் எடுத்துவிட்டார்!

சிவகுமார் குடும்பம் மறுக்கப்பட்ட எளியவர்களுக்கு கல்வி வழங்குகிறது.இதன் மூலம் சமூகத்தின் மிக அடித்தட்டில் இருந்த ஆயிரம்,ஆயிரம் பேர் மேலெழுந்து வருவதை சாத்தியப்படுத்தி வருகின்றனர்…! இவர்களும் மற்றவர்களைப் போல ஒரு சுயநிதி கல்லூரி ஆரம்பித்து கல்விச் சுரண்டல் செய்திருந்தால் இந்தக் கூட்டம் புகழ்ந்திருக்கும்!

நீட் எளியவர்களுக்கு மருத்துவ கல்வியை மறுக்கிறது என்பதை சூர்யா சொல்லிய போதும் இவர்கள் தான் பாய்ந்து குதறினார்கள்!

ஜோதிகா சமீப காலமாக சமூக அக்கறை சார்ந்த புரிதலுடன் மிகச் சிறப்பான வகையில் திரைத்துறையை கையாள்கிறார்! அதற்கு சூர்யா துணை நிற்கிறார்!அய்யோ மக்களை விழிப்படைய வைத்துவிடுவார்கள் போல இருக்கிறதே என்ற பதற்றம்..!

என்ன செய்வது இவ்வளவு சிறப்பான பணிகளை ஒரு அக்கிரகாரத்து பொண்ணு செய்திருந்தான்னா உச்சிமோர்ந்து புகழ்ந்திருக்கலாம்…, முடியலையே! போதாக்குறைக்கு இஸ்லாமிய அம்மாவிற்கும்,இந்து அப்பாவிற்கும் பிறந்த – ஜாதி,மத எல்லைகளைக் கடந்த- மனிதநேயமிக்க புரட்சிகர பெண்ணாகவல்லவா இருக்கிறாள்..?

மக்களின் மேல் உண்மையான அக்கறை கொண்டவர்கள் செயல்படும் போது பொங்கி எழுந்து அவர்களை அழிக்கத் துடிப்பது தான் வரலாற்றுகாலம் முதல் அவர்களின் வழக்கமாக இருக்கிறது!

வடலூர் வள்ளலார் தொடங்கி நம்மை வாழ்விக்க வந்த காந்தி வரை யாரை அவர்கள் விட்டுவைத்தார்கள்?

ஆக,அவர்கள் ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால்,அவர்கள் மிகச் சரியானவர்கள், நாம் ஆதரிக்க வேண்டியவர்கள் என்ற புரிதலுக்கு உடனே வந்துவிடலாம் தானே!