பழைய குருடி கதவை திறவடி

(ரவிச்சந்திரன் பிரஷாஹினி)

அதிகரித்து வருகின்ற கொரோனா காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் குறித்த செய்திகளே பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இன்றைய காலத்தில் இலங்கையானது பெரும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது. இதனால் நாட்டில் தொழிலாளி முதல் முதலாளிகள் வரை அனைவரது வாழ்க்கையிலும் பொருளாதார சிக்கல் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.