மாதவிடாய்

அந்த பெண்ணுக்கு பேய் பிடித்துவிட்டது என்று பேயோட்டுவது தவறானது என்று காட்டியிருப்பார்கள். படத்தின் முடிவில் மேற்கத்திய மருத்துவ முறையில் அது ஒரு உடலியல் கோளாராக காட்டி படத்தை முடித்திருப்பார்கள்.

ஆனால் சீன மரபுவழி மருத்துவம் இதை வேறு கோணத்தில் விளக்குகிறது.

மாதவிடாய் (மெனோபாஸ்) ஒரு ஆழ்ந்த ஆற்றல் மாற்றமாக பார்க்கிறது சீன மரபுவழி மருத்துவம். இது உடலியல் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது.

மாதவிடாய் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இயற்கையான இயல்பான பகுதியாகும். ஆனால் அது அவளுடைய மனம், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்களை பாதிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது.

மாதவிடாய் என்பது ‘ஒரு ஆற்றல் நுழைவாயில்’. ஒரு பெண் தன் உடல், மனம் மற்றும் எண்ணங்களை ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுக்கு தயார்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பு.

ஒரு பெண் தனது ஆரோக்கியத்தை மேம்படுத்தி தன்னை வலுப்படுத்திக் கொள்ள மாதவிடாய் ஒரு மூல ஆதாரம்.

மாதவிடாய் நாட்கள் என்பவை ஒரு பெண் தனது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்பை உள்ளிட்ட உறுப்புகளின் ஆற்றல்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து சமநிலைப்படுத்தவும் ஒத்திசைந்து செயல்பட வைக்கவும் ஆன தகுந்ததொரு காலவாய்ப்பாகும்.

பெண்களின் உடலில் மாற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்குகிறது மாதவிடாய். ஒரு புதிய தொடக்கத்தை தருகிறது.

ஒரு பெண் தன் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறியவும், பின்தொடரவும், தனது எண்ணங்களையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களையும் தொகுத்து முழுமைப்படுத்தி பொருள் பொதிந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவுமான வாய்ப்பை தருகிறது மாதவிடாய்.

நாம் வயதாகும்போது நமது உயிர்திறன் (Qi) இயல்பாகவே குறைகிறது. இதன் பொருள், நமது வழக்கமான தினசரி வாழ்க்கைக்கு “செலவு” செய்வதற்கான உயிர் ஆற்றல் குறைந்துகொண்டே வருகிறது என்பதாகும். இந்த ஆற்றல் பற்றாக்குறையை ஏதாவது ஒரு வகையில் சரி செய்யப்படாவிட்டால், உடலும் அதன் உறுப்புகளும் பாதிக்கப்படும்.

மன அழுத்தம், பயம் மற்றும் அதிக வேலை ஆகியவை கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் ஆற்றல் இருப்புக்களை வற்றச்செய்துவிடுகின்றன.

ஆரோக்கியமான இனப்பெருக்க செயல்பாடு மற்றும் இயக்குநீர்கள் (ஹார்மோன்) செயல்பாட்டிற்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களே பொறுப்பு.

சிறுநீரக ஆற்றல் குறைபாடு மாதவிடாய் பிரச்சினைகளுக்கு ஒரு மூல காரணம். உடலின் பல செயல்பாடுகளுக்கு சிறுநீரக ஆற்றலே அடிப்படை.

முக்கியமான மற்றொரு உறுப்பு கல்லீரல். பெண்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இதுதான் முதன்மை உறுப்பு.

கல்லீரல் நெடுவரை (லிவர் மெரிடியன்) பெண்களின் இனப்பெருக்க பகுதி வழியாக செல்கிறது.

கல்லீரலின் உயிர்திறன் (Qi) தேங்கமடைந்தோ அல்லது பலவீனமாகவோ இருக்கும்போது கல்லீரல் நெடுவரை பாதிக்கப்படும்.

சீரான இரத்த ஓட்டத்தையும் உணர்ச்சிகளையும் ஒழுங்குபடுத்துவது கல்லீரல்.

வழக்கமான இரத்த ஓட்டம் மற்றும் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கல்லீரலின் பங்கு உடலியல் அடிப்படையில் புர்ந்துகொள்வது ஒரு பெண்ணுக்கு எளிது.

ஆனால் தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரலுக்கு பெரும்பங்கு இருக்கிறது என்பது பெரும்பாலான பெண்களுக்கு தெரியாது.

ஒவ்வொருவரும் தமது உடலை தாமாக குணப்படுத்தும் திறனுடன்தான் பூமியில் பிறக்கிறார்கள்.

பெண்கள், குறிப்பாக, அவர்களின் மாதவிடாய் சுழற்சி மற்றும் அவர்களின் சிறப்பு உறுப்புகளைக் கொண்டே தங்களை குணப்படுத்திக் கொள்ளும் ஒரு தனித்துவமான திறனைப் பெற்றுள்ளனர்.

கருப்பைகள் மற்றும் சிறுநீர்பை ஆகியன பெண்களுக்கு ஆரோக்கியத்தை உருவாக்கும் திறனை வழங்குகின்றன, இதனால் அவர்களின் உடல் எந்த வயதிலும் ஆரோக்கியமான முறையில் செயல்பட முடியும்.

-சிகிச்சையாளர்…

டி.விஜயலட்சுமி எம்.டி (ஏ.எம்).,

கோவை இயற்கை நலவாழ்வகம்.
Ravichandran முகநூலில்…