மகளிர் நாளில் – படித்த – பிடித்த – ஆண்கவிதை.

உருக்கொண்ட இவ்வுடலம் பெண் தந்தது.

ஊட்டியுண்ட முதலமுதம் பெண் தந்தது.

உணர்வுற்ற முதற்சூடு பெண் தந்தது.

உறங்கீஇய மடிதோளும் பெண் தந்தது.

வரலாற்றில் பட்டதுயர் எண்ணற்றவை
வாழ்நாளில் படும்பாடும் எண்ணற்றவை
ஒருவாறாய் இன்றுள்ள நிலைகாணவே
ஊர்கூடித் தேரிழுத்தோம் உயர்வெய்தினோம்

வாழுமிந்த வாழ்வெல்லாம் பெண்போற்றுவோம்.
வையத்தில் அவர்வினைக்குத் துணையாகுவோம்.
ஆளுமையாய் அறிவினராய் அவராகட்டும்.
அன்புலகில் பெண்ணுரிமை தழைத்தோங்கட்டும்.

(கவிதை / மகுடேஸ்வரன்)