அதனால் – கொரோனா நோய்க்கிருமி தாக்கத்தால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் இடர் வலயங்களாக இனம்காணப்பட்டுள்ளன.
எனவே, இந்த மாவட்டங்களில் – மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை அவர்களது வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு – அனைத்து முன்னணி வணிக நிறுவனங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
Sathosa, Keells, Laugfs, Arpico, Food City, Araliya, Nipuna (சதோசா, கீல்ஸ், லாஃப்ஸ், ஆர்பிகோ, ஃபுட் சிட்டி, ஆரலியா, நிபூனா) மற்றும் ஏனைய வணிக நிறுவனங்களும் மொத்த விற்பனையாளர்களும் இந்த சேவையில் பங்கேற்பார்கள்.
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், எரிவாயு மற்றும் ஏனைய சேவைகளை தடையின்றியும் தொடர்ச்சியாகவும் மக்களுக்கு வழங்கும் இந்த திட்டம், நாளை 25ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து பார ஊர்திகள், சிற்றூர்திகள், முச்சக்கர வண்டிகள், உந்துருளிகள் மற்றும் பிற விநியோக வண்டிகள் ஆகியன ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளைகளின் போது பயணிக்க அனுமதிக்கப்படும்.