அமெரிக்காவில் மனித உரிமை மீறல் பற்றி பேசுவோம்: ஜெய்சங்கர் பதிலடி

இந்தியாவில் மனித உரிமை மீறல் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்காவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அது பற்றி கருத்து தெரிவிப்போம். நேற்று கூட இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.