அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் பெறுமதி உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபாய் 343.97 ஆகவும் விற்பனை விலை 356.73 ரூபாயாகவும் இன்று காணப்படுகின்றது.