அரசாங்கம் கவிழ்ந்ததையடுத்து இஸ்ரேலில் தேர்தல்

இறுதியாக தேர்தல் நடைபெற்று சரியாக ஓராண்டில் அடுத்தாண்டு மார்ச் மாதம் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

முதலிரண்டு தேர்தல்களும் தெளிவான பெரும்பான்மையை வழங்கியிருக்காத நிலையில், மூன்றாவது தேர்தலில் ஒன்றிணைந்த அரசாங்கம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், மோசடி வழக்கை எதிர்நோக்கியுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆறாவது தடவையாக பிரதமராக எதிர்பார்த்துள்ளார்.

2020ஆம் ஆண்டு அரச வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு கழிந்ததையடுத்து இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைந்திருந்தது.