அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளை போராட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில், நாளை (21) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டமானது, யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால், நாளை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, பொது அமைப்புக்களுடன் இணைந்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.