அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு பொதுமக்கள் முன்னிலையில்

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (31-01-2016) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது..காவிகளும் பாவாடைகளும் மட்டும் ஆசீர்வதிக்க கூப்பிட்ட தீர்வுப் பொதிக்குள் சிறுபான்மைமக்கள் யாவரும் உள்ளடக்கப்படவில்லை என்ற செய்தி இருக்கின்றது. இது வடக்கிற்கான சிறப்பாக யாழ்ப்பாணத்தின் கருதுகோள் அடிப்படையில் மட்டும் இருக்கும் என்பது தெரிகின்றது. (வரைவு நகல் என் கையில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தும் இதனை வாசிக்க முன்பு இந்த முடிவிற்கு நான் வந்திருக்கின்றேன்). ஆனாலும் புலிகளால் கட்டி வைக்கப்பட்ட இந்த கூட்டு இப்பவாவது ஏதோ எழுதித் தொலைத்திருக்கின்றது என்ற மகிழ்ச்சி என்னிடம் இல்லாமல் இல்லை. இந்நிலையில் ” நான் பதவியிலிருக்கும்வரை ஒற்றையாட்சியை ஒழிப்பதையோ அல்லது வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படுவதையோ ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.”என
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.