அரசியல் நெருக்கடி: 3 மணிநேரம் விவாதிக்க இணக்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ​நெருக்கடி தொடர்பில், நாடாளுமன்றத்தில் இன்றுமாலை 4 மணிமுதல் 7 மணிவரையில் விவாதிப்பதற்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, இந்த அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு, நேரம் ஒதுக்கித்தருமாறு கோரியிருந்தார். அந்தக் கோரிக்கையை அடுத்து, சபையில் அசாதாரண நிலைமையொன்று ஏற்பட்டது. அதன்பின்னர், சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்தே, அரசியல் நெருக்கடி தொடர்பில், மூன்று மணிநேரம் சபை ஒத்திவைப்பு வேளை விவாதமாக, நடத்தப்படவுள்ளது.