’அருளர்’ நினைவேந்தல் நிகழ்வு

ஈரோஸ் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவராகவும், தமிழர் அரசியல் சார்பான ஆய்வு நூல்கள் பலவற்றின் ஆசிரியராகவும் விளங்கி அண்மையில் காலமான ‘அருளர்’ எனப் பரவலாக அறியப்படும் அருட்பிரகாசத்தின் நினைவேந்தல் நிகழ்வு, யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், நல்லூரிலுள்ள யூரோவில் மண்டபத்தில், நேற்று (21) நடைபெற்றது.