அருவி பெண்கள் அமைப்பால் மகளிர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் அமைப்பால் மகளிர் தின நிகழ்வு, கிரான் பிரதேசத்தில் இன்று (09) ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி அமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்கள், தையல் இயந்திரம், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.