அலஸ்தோட்டம் பாலர் பாடசாலை

அலஸ்தோட்டம் மாயனவீதியில் அமைந்துள்ள பாலர்பாடசாலையின் முன்பாக அமைந்திருந்த மதிலும் வடிகானும் கடந்த மாரிகாலத்தின் போது இடிந்து வீழ்ந்து காணப்பட்டது. இதனை பெற்றோரும், ஆசிரியரும் எமது கவனத்திற் கொண்டுவந்ததையடுத்து சென்று பார்வையிட்டு தலைவர் அவர்களிடம் தெரியப்படுத்தியிருந்தோம். அதனை தலைவரும் வந்து பார்வையிட்டு பாலர் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி உடனடியாக தற்காலிக வடிகான் வேலையை ஆரம்பித்துவைத்தார். விரைவில் மதில் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கௌரவ உறுப்பினர்களான பஹார்தீன், பாபுகாந், பாலகனேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். விடுமுறைதினத்திலும் மக்களுக்காக பணி செய்யும் JCB இயக்குனர், சாரதிகள், தொழிலாளர்கள், மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள்.