அவசர சிகிச்சைப் பிரிவில் சிவசக்தி ஆனந்தன்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கொழுப்பு சத்து கூடியதன் காரணமாக, வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (29) மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே, அவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.