’அஸார்பைஜான் படைகளுடனான மோதல்களில் 26 பிரிவினைவாத ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர்’

அஸார்பைஜான் படைகளுடனான மோதல்களில் நகொர்னோ-கரபஹ் பிராந்தியத்தில் குறைந்தது 26 பிரிவினைவாதப் போராளிகள் கொல்லப்பட்டதாக இப்போராளிகளின் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ள நிலையில், இம்மோதல்களில் அவர்களின் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 84ஆக அதிகரித்துள்ளது.