ஆடை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம்

அரச உத்தியோகத்தர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட  தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார்.