ஆப்கானிஸ்தானில் பெண்கள் போராடுகின்றனர்

தாலிபன்கள் மிரட்டலாம். 20 ஆண்டுகால வன்முறைப் போராட்டத்துக்குப் பிறகு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களை இழந்த பிறகு, மிருக பலத்தைப் பயன்படுத்தி இங்கு அவர்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும், ஆப்கானிஸ்தானிய பெண்களில் சிலர் அவர்களின் மிரட்டலுக்கு பயப்பட மறுக்கிறார்கள்.