ஆறுமுக சாமி ஆணையம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறுக்கு விசாரணையைத் தொடங்குகிறது

  தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. 
அந்த ஆணையத்திற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் குறுக்கு விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்குகிறது. ஜெயலலிதாவிற்குச் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேருக்கு இந்த விசாரணையில் பங்கேற்கச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வரும் 7 மற்றும் 8ஆம் தேதி இந்த விசாரணையில் கலந்துகொள்ள உள்ளனர்.