ஆறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், தேயிலை மலைகள் காடாகி கிடப்பதாகவும் கொழுந்து விளைச்சல் குறைவாக இருப்பதால் தற்போது தோட்ட நிர்வாகம் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ கட்டாயமாக பறிக்க வேண்டுமெனவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதோடு, குறைவாக கொடுத்தால் கிலோ கணக்கில் சம்பளம் தருவதாகவும் இதனால் தொழில் ரீதியாக பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அதிகாரிகளும் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வருகை தந்ததுடன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தினர்.

 தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறும் தேயிலை மலைகளை துப்பரவு செய்யுமாறும் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு தோட்ட நிர்வாகம் இணங்கியதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.