ஆலங்குளத்தான்

அதன் பின்னர் 2021.10.29 ம் திகதி வெள்ளிக்கிழமை பூஜை செய்யப்பட்டு பாரிய சிரமதானம் செய்வதற்கான அனுமதியும் ஆசீர்வாதமும் பெறப்பட்டு ஆலங்குளத்தானின் ஆலயம் அழகாக சிரமதானம் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜைகள் செய்யப்படுவதோடு தீபாவளி தினத்தன்றும் விஷேட பூஜையும் செய்து அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் மற்றும் பண்ணைகளில் வேலை செய்யும் தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் வழங்கினோம்.

இதன் தொடர்ச்சியாக நாளைய பெளர்ணமி சர்வாலய தீப கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு ஆலங்குளம் ஆலயத்தில் நண்பகல் விஷேட பூஜையும் அன்னதான நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதையும் சைவத் தமிழ் உணர்வாளர்களுக்கும் பக்தர்களுக்கும் அறியத் தருகிறோம்.