இத்தாலியில் கடந்தாண்டு செப்டெம்பரிலேயே பரவிய கொவிட்-19

இத்தாலியில் கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்திலேயே கொவிட்-19 பரவியதாக அந்நாட்டின் மிலன் நகர தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் ஆராய்ச்சியொன்று வெளிக்காட்டியுள்ளது. இந்நிலையில், மத்திய சீனாவிலுள்ள வுஹானில் கொவிட்-19 பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், சத்தமில்லாமல் வேறெங்கும் கொவிட்-19 பரவியிருக்கும் சந்தர்ப்பத்தை நிராகரிக்க முடியாது என்று கூறியுள்ளது. இத்தாலியில் முதலாவது கொவிட்-19 நோயாளர், வட பிராந்தியமான லொம்பார்டியில் மிலனுக்கு அருகிலுள்ள சிறிய நகரமொன்றிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.