இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இரவு இலங்கை வந்த இந்திய் பிரதமர் நரேந்திர மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் மற்றும் முப்படை வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
