இந்தியாவில் குறைந்து செல்லும் கொரோனா உயிரிழப்புகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,649 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,09,16,589 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,06,21,220 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 9,489 குணமடைந்துள்னர்.

கொரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,39,637 ஆகக் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 90 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,732 ஆக அதிகரித்துள்ளது.