‘இந்தியாவை பகைத்துக்கொள்ள முடியாது’

வெளிநாட்டு வர்த்தகக் கொடுக்கல்-வாங்கல், சர்வதேச தொடர்புகள் போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மீள் ஏற்றுமதி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் இந்தியாவுடன் 66% மீள் ஏற்றுமதி கொடுக்கல் வாங்கல் செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“இந்தியா அண்டைய நாடு. இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது. ஒரே கிராமத்தில் உள்ள மைக்கல் அண்ணரும் சிறிபால அண்ணனும் அடித்துக் கொள்ளும்போது அவர்களை கிராமத்தில் இருந்து விரட்டுவது போல நடந்து கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.