இந்தியா: இலங்கை விவகாரம்.. 19 இல் சர்வகட்சி கூட்டம்

இலங்கை நெருக்கடி நிலை தொடர்பாக அமைச்சர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கமளிக்கவுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கூட்டத்தில், பாராளுமன்ற சர்வ கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் பங்கேற்க உள்ளனர்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18 ஆம் திகதி  ஆரம்பமாகி எதிர்வரும் ஓகஸ்ட் 12 வரை இடம்பெறவுள்ளது.

கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை சர்வகட்சி கூட்டம் டெல்லியிலுள்ள பாராளுமன்ற கட்டத் தொகுதியில் நடைபெற்ற போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.