இந்திய அம்புலன்ஸ் சேவையுடன் ‘ரோவும்’ வந்துவிடும்!

இந்திய தனியார் நிறுவனத்தின் அம்பூலன்ஸ் சேவை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டால், இந்திய உளவுச் சேவையான ரோ இலங்கையில் சுயாதீனமாக செயற்பட தொடங்கிவிடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். குறித்த அம்பூலன்ஸ் சேவையில் ஈடுபட சேர்த்துக் கொள்ளப்படவிருப்பவர்கள், இந்தியாவுக்கு சார்பானவர்களாகவே இருப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை பொறுத்தவரை அங்கு மோசமான சுகாதார சேவையே நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் குறித்த அம்புலன்ஸ் வண்டிகள் இந்திய பாதைகளுக்கு பொருத்தமானவையல்ல. இதேவேளை இலங்கையில் குறித்த அம்பூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் பொறுப்பை இலங்கையின் சுகாதார அமைச்சு கொண்டிருக்காது என்றும் விமல் வீரவன்ன தெரிவித்துள்ளார் இதிலிருந்து இலங்கை பெரிய அண்ணனாக செயற்படும் இந்தியாவுக்கு தமது பொருளாதாரத்தை அர்ப்பணிப்பதை காண முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.