இந்திய உயர்மட்டக்குழு வருகிறது

இந்திய உயர்மட்டக்குழு தூதுக்குழு, இலங்கைக்கு நாளை (23) விஜயம் செய்யவிருக்கின்றது. பிரதான பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழுவினரே இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்து இந்தத் தூதுக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். அந்த தூதுக்குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவர்.