இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவருக்கு சூடு

சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவரிடமிருந்து ஏகே 47 ரக துப்பாகி உள்ளிட்ட ஆயுதங்களையும் மீட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர் மொஹமட் ஷாபிர் மாலிக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கி, 7 கைக்குண்டுகள் உட்பட பொருட்களும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பகுதியிலிருந்து சனிக்கிழமை மாலை 3 மணியளவில் ஊடுருவல் அவதானிக்கப்பட்டதாகத் தெரிவித்த குறித்த அதிகாரி, 4 மணிவரை அசைவு தொடர்ந்ததையடுத்தே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகத் தெரிவித்தார்.

உயிரிழந்தவரிடமிருந்து பெறப்பட்ட அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையின் மூலம் அவருடைய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் எல்லை கடக்கும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அனுசரணை வழங்குகின்றமை தெளிவாகத் தெரிவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.