இந்திய கடலோர காவல்படையிடம் சிக்கிய இலங்கையர்

இதன் போது  குறித்த படகு இலங்கை நாட்டைச் சேர்ந்த படகு என்றும் அதில் வந்தவர் யாழ்ப்பாண மாவட்டம், வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம்  சாந்தரூபன் (வயது-30) என்றும் தெரியவந்தது.

இதையடுத்து இந்திய எல்லையில் மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினர் படகை கைப்பற்றி மீனவரை கைது செய்தனர்.   கைது செய்த மீனவரையும் , கைப்பற்றிய படகையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை மீனவர் கோடிக்கரை படகு துறைமுகத்திற்கு நேற்று  (29) இரவு 8 மணி அளவில் அழைத்து வரப்பட்டார். 

அழைத்து வரப்பட்ட  இலங்கை மீனவரை சுங்கதுறை கண்காணிப்பாளர் ஸ்டெல்லா மேரி, கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் குமார், கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.